Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalகண் திருஷ்டி நீக்கும் சக்தி இதற்கு உண்டு!

கண் திருஷ்டி நீக்கும் சக்தி இதற்கு உண்டு!

கண் திருஷ்டி நீக்கும் சக்தி இதற்கு உண்டு!

கண் திருஷ்டியை நீக்கும் சக்தி இந்த பொருளுக்கு உண்டு. குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு இந்தப் பொருளை மட்டும் வீட்டின் நிலை வாசலில் கட்டி வைக்க வேண்டும்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். போட்டி, பொறாமை நிறைந்த இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் நிம்மதியாக வாழ வேண்டும். யார் மீதும் கண் திருஷ்டி இருந்தால் அவர்களால் வாழ்வில் முன்னேற முடியாது. அதுமட்டுமல்லாமல் உடல்நல பாதிப்பும், அதனால் மருத்துவ செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். நமது சொந்த பந்தங்களால் கூட கண் திருஷ்டி உண்டாக கூடும்.

இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளன்று வீட்டில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும். ஆம், அவர்களுக்கு சுற்றி போட வேண்டும். அது கல் உப்பு கொண்டு கூட சுற்றிப் போடலாம். சிவப்பு நிற ஆலம் சுற்றி போடலாம். சிலர் வீடுகளில் கற்பூரம் கொண்டு சுற்றி வைப்பார்கள். இன்னும் சிலர் கடுகு, மிளகாய், உப்பு கலந்து சுற்றி வைப்பார்கள்.

அப்படியும் இல்லை என்றால் கருப்பு மிளகு, கடுகு, கருப்பு எள் இந்த 3 பொருட்களை கொண்டு சுற்றி வைப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் கண் திருஷ்டி நீங்கும். இந்த பொருட்களை எல்லாம் சுற்றி நெருப்பில் போட வேண்டும். பெரும்பாலும் இது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அமாவாசை நாளில் எலுமிச்சம் பழம் கொண்டு கூட சுற்றி போடலாம்.

பொதுவாக வீட்டிற்கு உறவுக்காரர்கள் என்று எல்லோருவரும் வருவார்கள், போவார்கள். அப்படி வருபவர்களின் எண்ணங்கள் நாம் நினைப்பது போன்று நல்ல எண்ணங்களாக இருக்குமா? என்று கேட்டால் அதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால், கெட்ட எண்ணங்களாக மட்டும் இருக்க கூடாது. பொறாமை எண்ணம் கொண்டவர்களாக கூட இருப்பார்கள். நாம் நன்றாக வாழ்ந்துவிடக் கூடாது என்று கூட நினைப்பார்கள். இவ்வளவு ஏன், ஒரு படி மேல் சென்று நமக்கு பில்லி, சூனியம் இப்படி செய்வினை வைக்கும் அளவிற்கு கூட அவர்களது எண்ணங்கள் இருக்கலாம்.

இது போன்ற எண்ணங்கள் கொண்டவர்களால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஒரே ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். அது என்ன பொருள் என்றால் வசம்பு தான். நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது சாலையோர கடைகளிலோ கிடைக்கும். அந்த ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொண்டு, அதனை மஞ்சள் துணியில் வைத்து முடிச்சுப் போட்டு உள்ளங்கைகளில் வைத்து, குல தெய்வத்தின் பெயரை 48 முறை சொல்ல வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு இறைவனை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த வழிபாட்டு மேற்கொள்ள வேண்டும்.

குல தெய்வத்தின் பெயரை சொல்லிக் கொண்டே இரவு 10 மணிக்கு முன்பாக அமாசாவை நாளன்று வீட்டு நிலை வாசலில் கட்டி விட வேண்டும். இதன் மூலம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் கெட்ட சக்திகளால் கூட உங்களது வீட்டிற்குள் நுழைய முடியாது. கெட்ட எண்ணத்தோடு வீட்டிற்குள் வருபவர்களின் எதிர்மறையை நிலை வாசலில் இருக்கும் வசம்பு ஈர்த்துக் கொள்ளும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வீட்டு நிலை வாசலில் கட்டி வைத்துள்ள வசம்பை மாற்றிவிட வேண்டும். வசம்பு இருக்கும் வீடானது கோயிலாக கூட மாறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =

Most Popular