Wednesday, November 1, 2023
HomeAanmeega Thagavalgalகந்தா சரணம் - ஷண்முகா சரணம்: ஆடி மாத அற்புத வழிபாடு!

கந்தா சரணம் – ஷண்முகா சரணம்: ஆடி மாத அற்புத வழிபாடு!

கந்தா சரணம் – ஷண்முகா சரணம்: ஆடி மாத அற்புத வழிபாடு!

ஆடி செவ்வாயில், அம்மாவையும் பைய னையும் வழிபடுங்கள். தோஷமெல்லாம் போக்குவான் முருகன். துக்கத்தையெல் லாம் போக்குவாள் பராசக்தி.
ஆடி மாதம் என்பதே வழிபாட்டுக்கான மாதம் தான். ஆடி மாதத்தில்தான் ஏராள மான பண்டிகைகள் வருகின்றன. திருநா ள்கள் வருகின்றன. விரதங்கள் மேற் கொ ள்ளவேண்டும் என வலியுறுத்த படுகிறது.

சக்தி வியாபித்திருக்கும் அற்புதமான மாதத்தில், நாமும் நம் மனோசக்தியையும் தேக சக்தியையும் பெருக்கிக் கொள்வதற் கு, பூஜைகளும் விரதங்களும் வழிபாடுக ளும் பெருந்துணையாக இருக்கும். பேரரு ள் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாதம் முழுக்கவே சக்தி வழிபாட்டுக் கு உரிய அருமையான நாட்கள். அம்பாள், ஒவ்வொரு சொரூபமாக வீற்றிருக்கிறாள். எனவே, உமையவளாகவும், மாரியம்மன்க ளாகவும் கருமாரியம்மனாகவும் செல்லிய ம்மனாகவும் துர்கையாகவும் வாராஹியா கவும் திகழும் அம்பிகையின் சொரூபங்க ளை வழிபடுவது மிகுந்த பலன்களை வாரி வழங்கக் கூடியது.

ஆடி மாதத்தில் தான் அம்பிகைக்கு வளை காப்பு விழா நடைபெறுகிறது. ஆடி மாதத் தின் பூர நட்சத்திரத்தில்தான் ஆண்டாள் அவதார திருநாள் கொண்டாடப்படுகிறது.
பெண் தெய்வங்களுக்கு உரிய ஆடி மாதத் தில், எங்கு பார்த்தாலும் வேப்பிலையின் மணம் கமழும். மஞ்சள் கமகமக்கும். பொங்கலிட்டு படையலிடுவார்கள். கூழ் வார்த்து வழங்குவார்கள்.

ஆடி மாதத்தில் தான் வரலக்ஷ்மி பூஜையும் கொண்டாடப்படுகிறது. மகாலக்ஷ்மியை வீட்டுக்கே வரவழைத்து, சுமங்கலிகளுக்கு மஞ்சள், புடவை முதலான மங்கலப் பொருட்கள் வழங்குவார்கள். இதேபோல் பெண் தெய்வங்களுக்கு மட்டு மின்றி, அழகன் முருகனுக்கும் இந்த மாத த்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தை மாதத்தின் பூசம் போல், வைகாசி மாத த்தின் விசாகம் போல், பங்குனி மாதத்தின் உத்திரம் போல், கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல், ஆடி மாதத்தில் வரக்கூ டிய கிருத்திகையும் ரொம்பவே விசேஷமான நாள்.

மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள் பக்தர்கள் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்பதே முருகப்பெருமானுக்கும் அம்பாளுக்கும் உரிய நன்னாள்தான். ஆடிச் செவ்வாய்க் கிழமையில், அம்பாளையும் முருகக் கடவு ளையும் வழிபடுவது மகத்தான பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை. இந்த நன்னாளில், உமையவளை யும் அவரின் மைந்தன் முருகக் கடவுளையு ம் மனதார வழிபடுங்கள் காலையில் வீட்டில் விளக் கேற்றி, முருகப்பெருமானுக் கும் அம்பிகை க்கும் செந்நிற மலர்கள் சூட்டுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயண ம் செய்யுங்கள். வேலவனுக்கு எலுமிச்சை சாதம் நைவே த்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கு அதிபதி முருகன். எனவே, செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் முதலான சகல தோஷங்களும் விலகும்.
அங்காரக பகவானை வழிபடுங்கள். தீய சக்தியையெல்லாம் அழித்து அருளுவான் அங்காரகன். கந்தவடிவேலனை வணங்கு ங்கள். கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பான். வீடு மனை யோகங்களையெல்லாம் வழங்கி அருளுவான். ஆடிமாதத்தின் முதல் செவ்வாயான இன்று கருணையும் அழகும் குடிகொண்ட வெற்றி வடிவேலனை அவசியம் தரிசியுங் கள். அல்லல் எல்லாம் போக்கி அருள்மழை பொழிவான்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 20 =

Most Popular