Monday, November 6, 2023
HomeAanmeega Thagavalgalகந்த சஷ்டி ஸ்பெஷல் 5

கந்த சஷ்டி ஸ்பெஷல் 5

தாரகாசுரன் அழிக்கப்படுதல் :

வீரபாகு, கந்தனிடம் நம் தேவப்படைகளுக்கு முன்பு அசுரப்படைகள் குறைந்த நேரத்திலே யே அழிவை நோக்கி சென்று விடும் என்று இறுமாப்புடன் கூறி கொண்டிருந்தார். ஆனால் கந்தப்பெருமான் எதிரியை எப்பொழுதும் குறைவாக எடை போடக்கூடாது என்றும், அவ்விதம் இருக்குமாயின் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியமாகிவிடும். ஆகவே நாம் சற்று சிந்தித்து செயல்படவேண்டும் என்று உரைத்தார்.
கந்தப்பெருமான், வீரபாகுவிடம் படைகளில் பாதியை அழைத்துக்கொன்டு தாரகாசுரனின் கோட்டைக்குள் சென்று அவனை வெற்றிக் கொள்ள வேண்டும் என்று உரைத்தார். வீரபா குவும் படைகளில் பாதியை அழைத்துக்கொ ண்டு தாரகாசுரனின் அரண்மனையை நோக்கி சென்றார்.
வீரபாகு வருவதை அறிந்த தாரகாசுரனும், தனது படையை நிறுத்தி அவர்களின் படைக ளை அழிக்கவும் தொடங்கினார். இரு படைக ளும் நேருக்கு நேர் போரிட்டு கொண்டே இரு ந்தன. தாரகாசுரனின் அனைத்து அஸ்திரங்க ளையும் வீரபாகு முறியடித்து கொண்டே இருந்தார். வீரபாகுவின் அனைத்துவிதமான அஸ்திரங்களையும், தாரகாசுரனும் முறியடி த்து கொண்டு இருவரும் சமநிலையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்தனர். பின் வீரபாகு தாரகாசுரனிடம், என் பிரபுவிடம் சரணடைவதே உனக்கு நன்மை அளிக்கும் என்று கூறினார்.
ஆனால், தாரகாசுரன் இனியும் தாமதிக்கக்கூ டாது என வீரபாகுவை கொல்ல முற்பட்டான். வீரபாகு அவரின் தாக்குதலை எதிர்கொண்டு வெற்றியும் அடைந்தார். பின் வீரபாகுவின் ஒவ்வொரு தாக்குதலும் தாரகாசுரனின் மாய வித்தைகளை கடந்து அவரைத் தாக்கத் தொடங்கின.
இவர்களை தாக்கி அழிக்க முடியாது என்று அறிந்த தாரகாசுரன் தனது மாய சக்தியால் ஒரு பெரிய மலையாய் உருவாகி தனது சகோதரனின் நகரத்திற்குள் எவரும் நுழையா வண்ணம் மாபெரும் கவசமாக அமைந்து கொண்டிருந்தான்.
மலைப்பகுதியில் தான் தாரகாசுரன் உள்ளான் என்பதை அறிந்த தேவர்கள் அசுரனின் பகுதி யில் நுழைந்த உடனே மலை நுழைவாயில் உடனடியாக மூடப்பட்டு வேறு ஒரு பக்கமாக திறந்து கொண்டது. வாயிலின் வழியாக சென்றவர்கள் நிலை என்னவாயிற்று? என்பது தெரியாமல் அனைத்து தேவர்களும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர்.
மலையின் உள்ளே அகப்பட்ட வீரபாகு முதலிய தேவர்கள் வெளிச்சமில்லாத அப்பகுதியில் என்ன செய்வது? என்று புரியாமல் முருகப்பெ ருமானை எண்ணி வணங்க தொடங்கினர்.
தன் தாயிடம் பெற்ற வேலை கையில் ஏந்திய வண்ணம் மலைப்பகுதி இருக்கும் பகுதியை அடைந்து மலையான தாரகாசுரனை நோக்கி தனது வேலினை எய்தார் முருகப்பெருமான். வேலானது தாரகாசுரனின் மாயவித்தைகளை அழித்து, தாரகாசுரனையும் கொன்றது. அங்கு அகப்பட்ட தேவர்கள் அனைவரும் விடுதலைப் பெற்று முருகப்பெருமானை வணங்கினர்.
சிங்கமுகன் அழிக்கப்படுதல் :

தனது சகோதரனான தாரகாசுரன் அழிக்கப் பட்டதை அறிந்த சூரபத்மனும், சிங்கமுகாசுர னும் மிகுந்த சினம் கொண்டு கந்தனை அழிக்க வேண்டும் என்று போரில் மிகுந்த ஆவேசத்துடன் இறங்கினர்.
சூரபத்மன் போர் புரிய வருகையில் சிங்கமு கன் அவரை தடுத்து நானே முருகனை வதம் புரிகிறேன் என்று உரைத்து, தனது சகோதர னான தாரகாசுரனை கொன்றவரை தேடி மிகு ந்த கோபத்துடனும், ஆவேசத்துடனும் போர் நடக்கும் இடத்திற்கு சென்று போர் புரியத் தொடங்கினான்.
தேவ வீரர்கள் அனைவரும் சிங்கமுகனின் மீது ஒவ்வொரு அம்பினையும் தொடுக்க, அவரின் தலையானது கீழே விழுந்து கொண்டே இருந் தது. ஆனாலும், சிங்கமுகன் மாய தந்திரங்கக ளை பிரயோகப்படுத்தி திரும்பவும் வேறொரு தலையை உருவாக்கி அவர்களை விட பலசா லியுடன் போர் புரியத் தொடங்கினான்.
சிங்கமுகாசுரனின் ஒவ்வொரு தலையும் கீழே விழும் பொழுது, வேறு ஒரு தலையை உருவா க்கும் விதத்தில் வரம் பெற்று உள்ளான் என்ப தை அறிந்த தேவ வீரர்கள், அவனை அழிப்பது எளிமையானது அல்ல என்பதை உணர்ந்தனர்
தேவ வீரர்கள் அனைவரும் கந்தனை எண்ணி தியானிக்க கந்தப்பெருமானும் அவ்விடம் தோன்றி தன்னிடம் உள்ள வேலினை சிங்கமு கனின் மார்ப்பு பகுதியை நோக்கி எய்தார். வேல் வந்த வேகத்தில் சிங்கமுகனின் நெஞ்சு பகுதியில் மிகவும் ஆழமாக பாய்ந்து அவனை அழித்து, பின் அது மீண்டும் கந்தனின் கரங்க ளில் வந்து சேர்ந்தது.
பானுகோபன் அழிக்கப்படுதல் :

தனது சகோதரனான தாரகாசுரனையும் பின்பு சிங்கமுகனையும் அழித்து அசுர சேனைகள் யாவும் அழிந்த பின்பும், சூரபத்மனின் ஆண வம் என்பது குறையவேயில்லை. கந்தனை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்நேரத்தில் சூரபத்மனின் மகனான பானு கோபன் தான் போருக்கு சென்று வர அனுமதி வேண்டி நின்றான்.
மாய வித்தைகள் அறிந்தவனும், தனது மகனா ன பானுகோபன் எதிரியை நோக்கி போருக்கு செல்ல அனுமதி அளித்தான் சூரபத்மன். மாய வித்தைகள் பல அறிந்து அதைப்பயன்படுத்தி யும் எதிரில் நின்ற கந்தனை வெற்றி கொள்ள முடியாமல் கந்தப்பெருமானால் அழிக்கப்படு கின்றான் பானுகோபன்.
சூரபத்மன் போருக்குச் செல்லுதல் :

தனது மகனும் இறந்தான் என்ற செய்தியை கேட்டதும் இனியும் அமைதி காத்தல் ஆகாது என்று சூரபத்மன் தானே எதிரியைக்கொல்ல போர்க்களத்தை நோக்கி விரைந்து சென்றான் அங்கே எதிராளியை கண்ட சூரபத்மன் அவரை கொல்லும் விதத்தில் பலவிதமான அம்புகளைத் தொடுத்தான்.
அவைகள் யாவற்றையும் கந்தப்பெருமான் தனது கடைக்கண் பார்வையால் அழித்து எறிந்தார். சூரபத்மன் தனது மாய பலத்தினால் பல உருவங்கள் எடுத்தும் முருகப்பெருமானை நோக்கி போர் தொடுத்துக்கொண்டே இருந்தான்.
எதிரிகளிடத்தில் கருணை கொண்ட கருணா நிதியின் மகனான கந்தன், சூரபத்மனின் செயல்களைக் கண்டு சினம் கொள்ளாமல் சூரபத்மனிடம் நீர் சிறைப்பிடித்து வைத்துள்ள தேவர்களை விடுவித்தால் நீ உயிர் வாழலாம் என்று எடுத்துக்கூறினார்.
அந்த பொழுதில் தன்னை அழிக்க வந்தவன் யார்? என்று உணர்ந்து கொண்டான் அசுரன். ஒரு சிறு பாலகனை கொல்வது என் வீரத்திற் கு முறையாகுமா என எண்ணினான். ஆனால், சூரபத்மன் கொண்ட ஆணவம் கந்தனின் அருளையும், அறிவுரையையும் ஏற்க மறுத்தது. அவன் மீண்டும், மீண்டும் கந்தனை கொல்லும் நோக்கம் இல்லாமல் எதிர்த்து போர் புரிய விருப்பம் கொண்டவனாக போர் புரியத் தொடங்கினான்.
ஆணவம் அழிதல் :

முருகனின் உருவத்தையும், தோற்றத்தையும் கண்டு சிறு பாலகனே இங்கு நில்லாமல் ஓடி விடு, இல்லையேல் உன் அழிவு உறுதியாகி விடும் என்று ஏளனப்படுத்தி அவரை பயம் கொள்ளும் நோக்குடன், தனது மாய சக்திகள் மூலம் மாபெரும் அலைகள் கொண்ட கடலாக உருமாறி பயப்படுத்த தொடங்கினான் அசுரன்.
அந்த அலைகள் கொண்ட கடல்களின் மீது முருகன் சக்தி வாய்ந்த அம்புகளை எய்தார். அந்த அம்புகளின் சக்தியால் கடல் சிறிதாக வே தோன்றவே அவன் தன் மாயசக்தியால் மாபெரும் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப் பெரிய அலைகளை கொண்டு கந்தனை பயப்படுத்தும் நோக்குடன் அவனருகே அலை களை தோற்றுவித்தான். ஆனால் கந்தன், சிறிதும் தாமதிக்காமல் அவனின் மீது நூற்று க்கணக்கான அம்புகளை எய்தார்.
ஷண்முகா சரணம்…
பாகம் 6 நாளை தொடரும்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + seventeen =

Most Popular