சுவாமி ஐயப்பன் வரலாறு 4

244

நேற்றைய தொடர்ச்சி
அசுரன் ஆணவம் அதிகரித்தல் :

சர்வ லோகங்களை தன்னுள் கொண்டுள்ள சிவபெருமானே தன்னைக் கண்டு மறைந்து செல்வதை மிகுந்த கர்வமாக எண்ணினான் பஸ்மாசுரன்.
எப்போது ஒருவருக்கு கர்வம், ஆணவம் போன்றவை நாம் யார்? என்பதனை மறக்க வைக்கின்றதோ, அக்கணத்தில் இருந்தே அவரின் அழிவானது தொடங்கி விட்டதை நாம் அறிய இயலும்.
பஸ்மாசுரன் கொண்ட கர்வமே அவன் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கினாலும், அது வே அவன் அழிவிற்கு வழி வகுக்க காரணமானது.
சிவபெருமானை தேடிச் செல்லுதல் :

பஸ்மாசுரன் தனது வரத்தினை சிவபெருமா னின் மீது பிரயோகிக்க. சிவபெருமான் இருக் கும் இடத்தை தேடி செல்லத் தொடங்கினான்.
சிவபெருமான் தனது பக்தர்களின் மீது கொண்ட அன்பால் அவர்கள் வேண்டிய வரத்தினை அளித்து, பின் அளித்த வரத்தினா ல் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி, தனது பக்தர்களை விடுத்து மறைந்து செல்லு ம் சூழல் உண்டாயிற்று. இந்த சூழலில் இருந் து காக்க சிவபெருமான் திருமாலை எண்ணினார்.
திருமால் வருதல் :

சிவபெருமானை தேடிச்சென்ற பஸ்மாசுரன் வழியில் ஒரு அழகிய உருவம் கொண்ட, காண்போரை ஈர்க்கும் வண்ணம் உடல் அழ கும், முக அழகும் கொண்ட ஒரு பெண்ணைக் கண்டு தான் எதற்காக இங்கு வந்துள்ளோம்? என்ற எண்ணத்தையும் மறந்து அந்த பதுமை யின் பின்னே செல்லத் தொடங்கினான்.
எழில் மிகுந்த அழகான உருவம் கொண்ட பதுமையே திருமாலின் மோகினி அவதாரம் ஆகும். பின்பு பதுமையிடம் யார் நீ? இவ்வளவு எழில் கொண்ட உன்னை இதுவரை நான் இவ் உலகில் கண்டது இல்லை என்று பஸ்மாசுரன் அந்த பதுமையிடம் கூறினான்.
பஸ்மாசுரனின் பதிலைக் கேட்ட பதுமையான மோகினி பஸ்மாசுரனை பார்த்தப்படி ஒரு அழ கிய எழில் மிகுந்த புன்னகைத்ததும் அவன் தன்னை முழுவதும் மறந்தான்.
மோகினியின் அழகில் மயங்கி நடனமாடிய அசுரனின் விருப்பம் :

மோகினியின் அழகிய சிரிப்பில் தன்னை மற ந்து தான் யார் என்பதை அறியாமல் நின்றிரு ந்த பஸ்மாசுரன் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை மோகினியிடம் எடுத்துரைத் தான். அதாவது நான் அசுர குலத்திலேயே மிகவும் பலம் வாய்ந்தவன் என்றும், என்னை எவராலும் வெல்ல இயலாது என்றும், என்னை கண்டு சிவபெருமானே பயந்து மறைந்துள்ளா ர் என்றும் தன்னைப் பற்றிய பெருமைகளை மோகினியிடம் எடுத்துரைத்தான்.
பின்பு, மோகினியே உன் அழகானது என்னிட ம் இருக்கும் சக்தியை காட்டிலும் பலம் கொண் டதாக உள்ளது என்றும், நீ என்னை மணந்து கொள்வாயா? என்றும் அசுரனான பஸ்மாசுர ன் மோகினியிடம் கேட்டான்.
மோகினியின் விருப்பம் :

ஆனால், மோகினியோ தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர் தன்னுடன் நடனப்போட்டியில் ஈடுபட்டு தன்னை வென்ற வனாக இருக்கும் பட்சத்தில் நான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினாள்.
அசுரனான பஸ்மாசுரன் அதற்கென்ன நானும் நடனக் கலையில் வல்லவன். உன்னுடன் போட்டியிட்டு உன்னை வென்று உன்னை மணம் செய்து கொள்கின்றேன் பார். என்று நடன போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
நடன போட்டி தொடங்குதல் :

பின்பு மோகினி நடனமாட அவளுடன் இணை ந்து, பஸ்மாசுரனும் நடனமாட தொடங்கினான். நடனக்கலையில் தனது வலது காலை தூக்கி, இடது கால் இவ்வுலகை வெல்லக்கூடியவர் என்பதைப் போல தனது சிகை அலங்காரம் மற்றும் வாகனங்கள் மூலம் அனைத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் மோகினி.
மோகினியின் நடனத்திற்கு தகுந்தாற்போல் பஸ்மாசுரன் தனது நடனக் கலைகளின் மூலம் மோகினி நடனத்திற்கு ஈடுகொடுத்து ஆடிக் கொண்டிருந்தான்.
வரமே அழிவை அளித்தல் :

பஸ்மாசுரனின் கவனம் முழுவதும் மோகினி யை சுற்றியே இருக்கும் பட்சத்திலும், அவள் ஆடும் நடன அசைவுகளை கவனிப்பதிலும் தனது முழு எண்ணத்தையும் அவள் மீது மட்டு மே கொண்டிருந்தான்.
இன்னொரு நிலையில் மோகினி தனது வலது காலை தூக்கி இடது காலால் பின் நோக்கி மடக்கி அபிலாசைகளை காட்டி தனது கரங்க ளால் பலவித அபிநய முத்திரைகளை, வெளிக் கொணர்ந்து அவனது கவனத்தை முழுவதும் தன் மீது இருக்கும்படி செய்து கொண்டிருந் தாள். பஸ்மாசுரன் நிகழ்வது யாதென அறியாமல் மோகினிக்கு சமமாக நடனமாடி அவளை மகிழ்வித்து கொண்டிருந்தான்.
நாளை தொடரும்…
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..