கந்த சஷ்டி ஸ்பெஷல் 3

93

நேற்றைய தொடர்ச்சி….
கங்கை நதியானது அக்னி தேவர் நதிக்கரை யில் விட்ட அந்த சக்தியினை யாவரும் அறியா வண்ணம் எடுத்துச் சென்றது.ஆனால், கங்கை நதியாலும் அந்த சக்தியின் வெப்பத்தை தாங்க முடியவில்லை. பின் இமயமலையில் உள்ள சரவணப் பொய்கையில் தர்ப்பை புற்கள் நிறைந்த இடத்தில் அந்த சக்தியினை விட்டுவிட்டது.
அந்த சக்தியில் இருந்து அனைவரின் இன்ன ல்களை போக்கும் வல்லமை கொண்ட அழகிய குழந்தை தோன்றியது. அப்பொழுது அங்கு நீராட வந்த ஆறு கன்னிய ர்கள் இந்த அழகிய குழந்தை வனத்தில் தன்ன ந்தனியாக இருப்பதை கண்டு வியந்தனர். பின்பு அதில் இருந்த ஒரு கன்னியர் இவன் என்னவன் எனக் கூற, ஆறு கன்னியர்களும் தங்களுக் குள் மோதலில் ஈடுபட்டனர். இதைக் கண்டு அழகிய சிரிப்பை உதிர்த்த சிவகுமரன் ஆறு குழந்தைகளாக அவர்களுக்கு தோற்றம் அளித்தார்.
பின்னர் கன்னியர்கள் தங்களுக்குள் இருந்த மோதல்களை விடுத்து ஒவ்வொரு கன்னியர்க ளும் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டனர். அவ்வேளையில் சிவகுமரன் அழுகவே அங்கு இருந்த கன்னியர்கள் அவருக்கு தேவையான பாலை அளித்தனர்.
ஆறு கன்னியர்களிடம் இருந்து பாலை பருகி யதால் குமரனை ஆறு முகன் என்றும் அழைக் கின்றோம். தியான நிலையில் இருந்து தன் பழைய நிலைக்கு பார்வதிதேவியும், சிவபெ ருமானும் வந்ததும் நம் மைந்தன் எங்கே? என பார்வதிதேவி வினவினார். எம்பெருமானோ இங்கு நிகழ்ந்த யாவற்றையும் உணர்ந்து பின் பார்வதிதேவி யிடம் அமைதி கொள்வாய் தேவி என்று கூறினார். தேவியின் மனமோ மிகவும் சங்கடத்திற்கு உள்ளானது.
சிவபெருமான், பார்வதிதேவியிடம் நம் மைந்தன் நலமுடன் இருக்கிறான் கவலைக் கொள்ள வேண்டாம் தேவி. காலம் கனியும் போது நாம் குமரனை காணச் செல்வோம் என கூறினார். பதியின் கூற்றுகளில் உண்மை இருக்கும் என உணர்ந்த பார்வதி தேவி குமரனை பற்றிய கவலைகள் இருந்த போதும் அதை வெளிக்கொள்ளாமல் இருந்தார்.
காலங்கள் விரைந்து ஓடியது. அசுரர்களின் அறமற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. சூரபத்மன் எதிர்ப்புகள் அனைத்தை யும் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் களை த்தெரிந்தான். அசுரர்களின் படைபலமோ அதிகரிக்கத் தொடங்கின. அசுர குல குருவான சுக்கிராச்சாரியாரின் வழிகாட்டுதல் மூலம் படைபலத்தை பெருக்கி கொண்டான் சூரபத்மன்.
குழந்தையாக இருந்த குமரனோ கன்னியர்கள் அறுவரின் அரவணைப்பில் அன்போடு வளர்ந்து வந்தார். சிவசக்தியின் அம்சமான குமரன் கன்னியர்கள் அறுவரிடம் வளர்ந்து வருவதை நாரதர் மூலம் தேவர்கள் அறிந்தா ர்கள். இச்செய்தியை கேட்ட தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். பின்பு தேவர்கள் அனைவரும் இணைந்து கைலாயமலை யில் இருக்கும் சிவபெருமானை காண சென்றனர். இவர்களின் வருகை எதற்கென்று நந்தி தேவ ருக்கு புரிவதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானையும், சக்தியான பார்வதி தேவியையும் பலவாறு போற்றி பாடினார்கள்.
உமையவள் பார்வதிதேவி என்னவென்று புரியாமல் இருந்தார். ஆனால், அனைத்தும் அறிந்த சிவபெருமான் அமைதி காத்தார். தேவர்களின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி யை கண்ட தேவிக்கு எம்பெருமானால் ஏதோ மார்க்கம் பிறந்துள்ளது எனவும், சூரபத்மன் மற்றும் அவனுடன் இருக்கும் மற்ற அசுரர்க ளுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்பதையும் உணர்ந்தார்.
பார்வதி தேவி சூரபத்மனின் அழிவு என்பது சிவனின் அம்சத்தினால் மட்டுமே ஏற்படும் என எண்ணிய கணத்தில் நாரத முனிவரின் மூலம் அறிந்த தகவலை தேவர்கள் தேவியிடம் கூறி னர். அப்போது தேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின், எம்பெருமான் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வரவே எம்பெரு மானுடன் சரவண பொய்கையில் கன்னியர் வளர்ப்பில் வளர்ந்து வரும் தன் மகனை காண விரைந் தார்கள். சரவண பொய்கையில் வள ர்ந்து வந்த ஆறு குழந்தைகளையும் கண்டார் பார்வதிதேவி. அப்போது ஆறு குழந்தையும் ஒரே குழந்தையாக (குமரன்) மாறியது.
பார்வதி தேவி மகனே என்று அழைத்து குமர னிடம் சென்றார். குமரனோ தேவி தாங்கள் யார்? என்று கேட்டார். என் தாயானவர்கள் இவர்களே என ஆறு கன்னியர்களையும் காட்டினார்.
கன்னியர்களோ வந்திருப்பவர்கள் யார் என்ப தை அறிந்து பணிந்து வணங்கினர். பின், குமரனிடம் தாங்கள் அறுவரும் உன்னை வளர்த்தவர்கள் மட்டுமே என்று கூறினர். உன்னை ஈன்றவர் அனைத்திற்கும் தாயான பார்வதிதேவி என்று உரைத்தனர். இதை சற்றும் எதிர்பாராத குமரன் மிகுந்த குழப்பத்தி ற்கு ஆளானார். பின்பு, எம்பெருமான் குமரனி ன் பிறப்பில் உள்ள அவசியம் பற்றி எடுத்துரை த்தார். ஒருபுறம் தன்னை ஈன்றவர்கள், மறுபு றம் தன்னை வளர்த்தவர்கள் என மனதில் குழப்பத்துடன் இருந்தார் குமரன். பின் ஆறு கன்னியர்களும் முருகனிடம் சென்று அனைத் தையும் புரியும் பொருட்டு எடுத்துரைத்தனர்.
தாங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு வந்தபோது இருந்த நிலையை எடுத்துக்கூறி, பார்வதிதே வியின் மகத்துவத்தை எடுத்துரைத்தனர். பின் தன்னை ஈன்ற தாயிடம் சென்று தங்களிடம் அவ்விதம் கூறியமைக்கு மன்னிக்க வேண்டி னார் குமரன். பின் குமரன் பார்வதிதேவியை தன்தாயாக முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்
குமரனுக்கு குழந்தை முதலே கார்த்திகை பெண்களான அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தார்கள். அதன் பொருட்டு சிவபெ ருமான் இனிமேல் குமரன் ‘கார்த்திகேயன்” என்று அழைக்கப்படுவான் என்றும், கார்த்தி கை பெண்களான கிருத்திகை நட்சத்திரத்தன் று கார்த்திகேயனை எண்ணி விரதமிருக்கும் அனைவரின் வாழ்விலும் இருந்த இன்னல்கள் யாவும் நீங்கி சகல வசதிகளையும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்றும் கூறி அருள் பாவித்தார்.
அசுரர்களின் ஆட்சி நகரம் :

சூரபத்மன் விஸ்வகர்மாவைக் கொண்டு மகேந்திரபுரியை உருவாக்கி ஆட்சி புரிந்து வந்தான். அதேபோல் அவன் சகோதரனான சிங்கமுகன் ஆசுரபுரி என்ற நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தான். தாரகன் மாயாபுரி என்னும் நகரத்தை அமைத்து ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.
இவர்களின் சகோதரியான அஜமுகி என்பவள் விருப்பப்பட்ட ஆடவனோடு அவன் விருப்பம் இருப்பினும் இல்லா விட்டாலும் அவனுடன் கட்டாயமாக கூடி மகிழ்ந்து சிறிதும் ஒழுக்க மின்றி வாழ்ந்து வந்தாள்.
பின்பு, அவர்களின் மற்ற சகோதரர்களுக்கு உலகில் உள்ள மற்ற எழில்மிகு பெண்களைப் பிடித்து வந்து அவர்களுக்கு இறையாக்கி கொண்டிருந்தாள்.
தங்களுக்கு அழிவு இல்லை என்னும் ஆங்கா ரத்தோடும், தன்னை எவராலும் வெல்ல இயலாது என்ற ஆணவத்தோடும் பெற்ற வரத்தினை தவறாக பயன்படுத்தி அவர்களின் அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்களை எதிர்க்கும் வல்லமை கொண்ட சிவ புத்திரன் கந்தன் உருவானதை அறிந்த இவர்கள், கந்தனை அழிக்க பலவித முயற்சி களை மேற்கொண்டனர். அசுரர்களின் எதிர்ப்பு களை தாண்டி சிவ புத்திரனான கந்தன் சர்வ வல்லமையுடன் தோன்றி வளர்ந்து இவர்களை எதிர்க்கும் காலமம் கனிந்து வந்து கொண்டிருந்தது.
நவதேவியர்களின் தோற்றம் :

பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினத்தில் இருந்து நவதேவியர் உருவா கினர். இவர்களே பின்னாளில் சிவபெருமானின் அருளால் நவகாளிகள் என்று அழைக்க ப்பட்டு எல்லைத் தெய்வங்களாக இருக்கின்ற னர். நவகாளிகளிடமிருந்து வீரபாகு முதலிய ஒன்பது லட்ச தேவ வீரர்கள் தோன்றினார்கள்.
ஷண்முகா சரணம்….
பாகம் 4 நாளை தொடரும்…