சுவாமி ஐயப்பன் வரலாறு 2

301

நேற்றைய தொடர்ச்சி…
சிவபெருமானையே பரிசோதித்த அசுரன் பஸ்மாசுரன் தவம் இயற்றுதல் :

பல காலங்களுக்கு முன்பே பஸ்மாசுரன் என் னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினார். நாட்கள். கால ங்கள். என அனைத்தையும் கடந்து மனதை ஒருமுகப்படுத்தி சிவபெருமானை சிந்தையில் கொண்டு தவத்தினை தொடங்கினார்.
சிவபெருமான் காட்சி அளித்தல் :

பஸ்மாசுரனின் தவத்தில் மனம் மகிழ்ந்த சிவ பெருமான் அவனுக்கு காட்சியளித்தார். சிவ பெருமான் பஸ்மாசுரனை நோக்கி உன் தவத் தால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும், வேண் டும் வரத்தை கேட்டு பெறுவாயாக… என்றும் கூறினார்.
வரம் பெறுதல் :

அசுரனும் எப்போதும் போலவே தன்னை யா ராலும் அழிக்க இயலாத அழிவில்லாத வாழ்க் கை வேண்டும் என்று வேண்டினான். அதற்கு சிவபெருமான் இயற்கை நியதிக்கு அனைவ ரும் கட்டுப்பட்டவர்களே. இதிலிருந்து விதி விலக்கு பெற இயலாது. ஆகவே வேறு வரத்தி னை கேட்பாயாக… என்று கூறினார். பின்னர் சிந்தித்த பஸ்மாசுரன் தான் யாருடைய சிரசில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண் டும் என்ற வரத்தினை அழிப்பீர்களா என்று வேண்டி நின்றான். சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அவ்விதமே அளித்தார்.
சிவபெருமானையே பரிட்சித்தல் :

தான் வேண்டிய வரத்தினைப் பெற்ற அசுரன் அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து பெற்ற வரத்தின் வலிமையை அறிந்து கொள்ள தனக்கு வரம் அளித்த சிவபெருமானின் மீது பரிசோதிக்க முற்பட்டான்.
சிவன் தான் அனைத்தும் அறிந்தவராயிற்றே. அதாவது தனது பக்தர்களின் செயல்பாடுக ளை நன்கு அறிந்தவராயிற்றே. எனவே, வரம் அளித்த சிவபெருமான் அவ்விடம் விட்டு மறை ந்து சென்றார். பின் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களில் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு தனது திருவிளையாடலை தொடங் கினார் சிவபெருமான்.
பதுமையை கண்டு மயங்கிய அசுரன் ஆணவம் அதிகரித்தல் :

சர்வ லோகங்களை தன்னுள் கொண்டுள்ள சிவபெருமானே தன்னைக் கண்டு மறைந்து செல்வதை மிகுந்த கர்வமாக எண்ணினான் பஸ்மாசுரன்.எப்போது ஒருவருக்கு கர்வம், ஆணவம் போன்றவை நாம் யார்? என்பதனை மறக்க வைக்கின்றதோ, அக்கணத்தில் இருந் தே அவரின் அழிவானது தொடங்கி விட்டதை நாம் அறிய இயலும்.
பஸ்மாசுரன் கொண்ட கர்வமே அவன் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கினாலும், அதுவே அவன் அழிவிற்கு வழி வகுக்க காரணமானது.
சிவபெருமானை தேடிச் செல்லுதல் :

பஸ்மாசுரன் தனது வரத்தினை சிவபெருமா னின் மீது பிரயோகிக்க… சிவபெருமான் இரு க்கும் இடத்தை தேடி செல்லத் தொடங்கினான்.
சிவபெருமான் தனது பக்தர்களின் மீது கொ ண்ட அன்பால் அவர்கள் வேண்டிய வரத்தி னை அளித்து, பின் அளித்த வரத்தினால் பல விதமான இன்னல்களுக்கு ஆளாகி, தனது பக்தர்களை விடுத்து மறைந்து செல்லும் சூழ ல் உண்டாயிற்று. இதில் இருந்து காக்க சிவ பெருமான் திருமாலை எண்ணினார்.
திருமால் வருதல் :

சிவபெருமானை தேடிச்சென்ற பஸ்மாசுரன் வழியில் ஒரு அழகிய உருவம் கொண்ட, காண் போரை ஈர்க்கும் வண்ணம் உடல் அழ கும், முக அழகும் கொண்ட ஒரு பெண்ணைக் கண்டு தான் எதற்காக இங்கு வந்துள்ளோம்? என்ற எண்ணத்தையும் மறந்து அந்த பதுமை யின் பின்னே செல்லத் தொடங்கினான்.
எழில் மிகுந்த அழகான உருவம் கொண்ட பது மை திருமாலின் மோகினி அவதாரம் ஆகும். பின்பு பதுமையிடம் யார் நீ? இவ்வளவு எழில் கொண்ட உன்னை இதுவரை நான் இவ்வுலகி ல் கண்டது இல்லை என்று பஸ்மாசுரன் அந்த பதுமையிடம் கூறினான்.
பஸ்மாசுரனின் பதிலைக் கேட்ட பதுமையான மோகினி பஸ்மாசுரனை பார்த்தப்படி ஒரு அழ கிய எழில் மிகுந்த புன்னகைத்ததும் அவன் தன்னை முழுவதும் மறந்தான்.
பாகம் 3 நாளை தொடரும்…
சுவாமியே சரணம் ஐயப்பா….