Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalகர்ம வினைகள் நீக்கும் தானங்கள் !!!

கர்ம வினைகள் நீக்கும் தானங்கள் !!!

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.

பொருட்கள் – தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

அன்னம் – வறுமையும், கடனும் நீங்கும்

துணி – ஆயுள் அதிகமாகும்

தேன் – புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் – கண்பார்வை தெளிவாகும்

அரிசி – பாவங்களை போக்கும்

நெய் – நோய்களை போக்கும்

பால் – துக்கம் நீங்கும்

தயிர் – இந்திரிய சுகம் பெருகும்

பழங்கள் – புத்தியும், சித்தியும் உண்டாகும்

தங்கம் – குடும்ப தோஷங்களை நீக்கும்

வெள்ளி – மனக்கவலை நீங்கும்

பசு – ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

தேங்காய் – நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி – ஞானம் உண்டாகும்

பூமி தானம் – ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தானம் செய்வது சிறப்பு. சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று உண்டு. அது என்ன?

அது தான் பசுவிற்கு உணவளிப்பது. கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு என்ன பொருட்கள் தானமாக தரலாம் என்ற கேள்விக்கு பதில் இதோ.

பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு. அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்து நமது கர்ம வினைகளை போக்குவோம். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும். திருவண்ணாமலை தலத்தில் பசுவிற்கு உணவளித்தலே உலகின் மிகப்பெரிய தானம் ஆகும். இவ்வாறு செய்யும் தருணம் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கே கிட்டும்.

அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள். தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பசுவிற்கு உணவளிப்போம். நமது கர்ம வினைகளை தூள் தூளாக்குவோம்

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

Most Popular