Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalதிருமண பாக்கியம் கிடைக்க அருளும் கோகணேஸ்வரர்!

திருமண பாக்கியம் கிடைக்க அருளும் கோகணேஸ்வரர்!

திருமண பாக்கியம் கிடைக்க அருளும் கோகணேஸ்வரர்!

புதுக்கோட்டை மாவட்டம் திர்க்கோவர்ணம் என்ற ஊரில் அருள்பாளிக்கும் மூலவர் கோகணேஸ்வரர் என்ற மகிளவணேஸ்வரர்,  அம்பிகை பிரகதாம்பாள் ஆலயத்தின் பெருமையை பற்றி இப்பதிவில் பார்ப்போம்…

ஆலயத்தின் சிறப்பு:

இத்தல தல விருட்சம் மகிழ மரம் மற்றும் தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகும்.  மேலும்,  இது ஒரு குடவரைக் கோயில் ஆகும். இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் “அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை’ எனக்கூறி சிறிதுவெல்லத்தை எடுத்துவைத்துவிட்டுதேடினால் உடனே கிடைத்துவிடும்.

தலச் சிறப்பு:

சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ தலம். கிழக்கு பார்த்திருக்கும் கோகணேஸ்வரர் சன்னதி. குடவரைக் கோயில். பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என்று வரலாற்று கதை ஒன்று கூறுவதால் பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர். பாறையின் மீதே கட்டப்பட்ட குடவறைக் கோயில்கள் கொண்ட மிகப் பழமையான கோயில்.

புராணக் கதை:

காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது. பின்பு கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை சேவித்து அவர்கள் அனுகிரகம் பெற்று தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடு என்று சொல்கிறார்கள்.

பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிந்து சாப்பிட்டுவிடுவேன் என்று இறைவன் பயமுறுத்தினார். பசுவோ விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என காமதேனு, புலியிடம் (ஈசனிடம்) சொல்லி இங்குள்ள சுவாமியை வணங்கி விட்டு மீண்டும் செல்ல அங்கு திருவேங்கைவாசலில் காமதேனுவுக்கு மோட்சம் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது.

பிரார்த்தனை:

இத்தலத்து ஈசனை வணங்கினால் சாப விமோசனம் கிடைக்கும். மேலும், ஏதேனும் பொருள் தொலைந்தால் “அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை’ எனக்கூறி சிறிது வெல்லத்தை எடுத்து வைத்து விட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும். இவை தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வெல்லம் வைத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தல் சிறப்பு. தவிர மஞ்சள் பொடி, திரவிய பொடி ஆகியவை படைத்து வழிபடலாம். இறைவனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். இவை தவிர பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 4 =

Most Popular