Friday, October 27, 2023
HomeAanmeega Thagavalgalகுத்து விளக்கில் தீபம் ஏற்றும் முறைகள்

குத்து விளக்கில் தீபம் ஏற்றும் முறைகள்

ஒரு முகம் ஏற்றுவது – மத்திம பலன்களைத் தரும்.

இரண்டு முகம் ஏற்றுவது – குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது – புத்திர சுகத்தைத் தரும்.

நான்கு முகம் ஏற்றுவது – மாடு, மனை போன்ற வசதி, வாய்ப்புகளைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது – செல்வத்தைப் பெருக்கும் .

தீபத்தின் வகைகள் : பல்வேறு வகையான தீபங்களை ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது என்பது இந்து சமயத்தினருக்கே உள்ள தனிச் சிறப்பாகும். பொதுவாக வீட்டில் தீபம் ஏற்ற பஞ்சலோக விளக்கு உகந்தது என்றாலும், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கே சிறப்பானது . குத்து விளக்கு என்றால் ஐந்து முகங்களைக் கொண்ட விளக்கே ஏற்றது.

விளக்கு ஏற்றப்பட்டு வைக்கப்படும் திசைகளால் வரும் பலன்கள் :

விளக்கை வடக்குத் திசையில் ஏற்றி வழிபட்டால் நிறைவான பொருள் வசதி சித்திக்கும். திருமணத் தடை நீங்கும். அறிவு வளர்ச்சி அடையும். விளக்கை கிழக்குத் திசையில் ஏற்றி வழிபட்டால் துயரங்கள் விலகும். மேற்கு திசையில் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையை நீக்குவதோடு விரோதங்களையும் போக்கும். மேலும் நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

ஆனால் தெற்கு திசையில் மட்டும் விளக்கு ஏற்றி வைத்தல் கூடாது. (அவ்வாறு செய்வது மரணத்தை அழைப்பதாகும் என்கிறது உபநிஷத், பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் போதும், தலை வைத்துப் படுக்கும் போதும் கூட தெற்கு திசையைத் தவிர்க்கவும்).

விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டியது :

வீட்டில் விளக்கேற்றி வழிபடும் போது பஞ்சால் திரியிடுவதே மிகவும் சிறப்பானது. தாமரைத் தண்டைத் திரித்து ஏற்றினால் முன்வினை பாவம் நீங்கும். வாழைத் தண்டினை நூலாகத் திரித்து ஏற்றினால் தெய்வ சம்மந்தமான குற்றங்கள் நீங்கும் , அத்துடன் செய்வினைக் கோளாறுகளும் நீங்கும். சுத்தமான மஞ்சள் சேலைத் திரி எனில் அம்பாள் அருள் கிடைக்கும், அத்துடன் மனப் பிரமையும், குழப்பங்களும் நீங்கும். வெள்ளெருக்குப் பட்டையைத் திரியாக்கிப் போட்டால் செல்வம் விருத்தி அடையும். புதுச் சிவப்பு சேலைத் துண்டினைத் திரியாக்கி ஏற்றினால் திருமணத் தடை விலகும். புத்திரப் பேறு கிடைக்கும். முருகன் அருளும் கிடைக்கும்.

அண்ணாமலையார் தீபத்தின் உட்பொருளின் தத்துவம் :

திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மகா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகின்றனர். இதன் உட்பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சிறு ஜ்வாலை , சிறிது தூரத்திற்குத் தான் தெரியும் . சொக்கப்பனை என்றால் அதன் பிரகாசம் வெகு தூரத்திற்குத் தெரியும் . அண்ணாமலை தீபம் போன்று மலை மீது ஏற்றி வைத்து விட்டால் அது பல ஊர்களைத் தாண்டித் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற சகல ஜீவ ஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாவங்கள் போக வேண்டும் என்ற உத்தமமான எண்ணத்தில் தான் சொக்கப்பனை , அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் முன்னோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + eight =

Most Popular