Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalதமிழ் வருடங்களின் சமஸ்கிருத பெயர்களும் தமிழ் பெயர்களும்!

தமிழ் வருடங்களின் சமஸ்கிருத பெயர்களும் தமிழ் பெயர்களும்!

தமிழ் வருடங்களின் சமஸ்கிருத பெயர்களும் தமிழ் பெயர்களும்!

நம் முன்னோர்கள் 60 ஆண்டுகளுக்கான பெயர்களை தமிழிலும் சூட்டியிருக்கிறார்கள். 60 பெயர்களும் சமஸ்கிருத பெயர்களிலேயே அறியப்படுகின்றன.

தமிழர்களின் வருடப்பிறப்பாக சித்திரை மாதத்தின் முதல் நாள் இருக்கிறது. சித்திரை மாதம் தொடங்கி பங்குனி வரையான ஒரு வருட காலத்தை ஒரு பெயர் வைத்து அழைப்பது, தமிழர்களின் வழக்கம். நம் முன்னோர்கள் இப்படி 60 ஆண்டுகளுக்கான பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். 60 ஆண்டுகள் முடிந்ததும் மீண்டும், முதல் வருடத்தின் பெயரில் இருந்து 60 வருடங்கள் தொடர்ச்சியாக வரும். பொதுவாக இந்த 60 பெயர்களும் சமஸ்கிருத பெயர்களிலேயே அறியப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திற்கும் தமிழிலும் பெயர்கள் இருந்திருக்கின்றன. அந்த தமிழ்ப் பெயர்களை இங்கே பார்க்கலாம். இங்கே சமஸ்கிருதப் பெயர்களும்.. அதற்கான தமிழ்ப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பிரபவ – பிரம்மா – நற்றோன்றல்
2. விபவ – விஷ்ணு – உயர்தோன்றல்
3. சுக்கில – மகேசன் – வெள்ளொளி
4. பிரமோதூத – கணேசன் – பேருவகை
5. பிரஜோத்பத்தி – கணபன் – மக்கட்செல்வம்
6. ஆங்கில – ஷடானன் – அயல்முனி
7. முகவல்லீ – திருமுகம்
8. பவ – கௌரீ – தோற்றம்
9. யுவ – ப்ராம்ஹீ – இளமை
10. தாது – மகேஸ்வரி – மாழை
11. ஈஸ்வர – கௌமாரி – ஈச்சுரம்
12. பகுதானிய – வைஷ்ணவி – கூலவளம்
13. பிரமாதி – வாராஹி – முன்மை
14. விக்கிரம – இந்திராணி – நேர்நிரல்
15. விஷு – சாமுண்டி – விளைபயன்
16. சித்திரபானு – அரோகன் – ஓவியக்கதிர்
17. சுபானு – பிராஜன் – நற்கதிர்
18. தாரண – படரன் – தாங்கெழில்
19. பார்த்திப – பதங்கன் – நிலவரையன்
20. விய – ஸ்வர்ணரன் – விரிமாண்பு
21. சர்வசித்து – ஜ்யோதிஷ்மான் – முற்றறிவு
22. சர்வதாரி – விபாஸன் – முழுநிறைவு
23. விரோதி – கச்யபலி – தீர்பகை
24. விக்ருதி – ரவி – வளமாற்றம்
25. கர – சூரியன் – செய்நேர்த்தி
26. நந்தன – பானு – நற்குழவி
27. விஜய – ககன் – உயர்வாகை
28. ஜய – பூஷா – வாகை
29. மன்மத – ஹிரண்யகர்பன் – காதன்மை
30. துன்முகி – மரீசி – வெம்முகம்
31. ஹேவிளம்பி – ஆதித்யன் -பொற்றாடை
32. விளம்பி – ஸவிதா – அட்டி
33. விகாரி – அருக்கன் – எழில்மாறல்
34. சார்வரி – பாஸ்கரன் – வீறியெழல்
35. பிலவ – அக்கினி – கீழறை
36. சுபகிருது – ஜாதவேதன் – நற்செய்கை
37. சோபகிருது – ஸஹோஜஸன் -மங்கலம்
38. குரோதி – அஜிராபிரபு-பகைக் கேடு
39. விசுவாவசு – வைஸ்வாநரன் – உலக நிறைவு
40. பரபாவ – நர்யாபஸன் – அருட்டோற்றம்
41. பிலவங்க – பங்க்திராதஸன் – நச்சுப்புழை
42. கீலக – விஸர்பி – பிணைவிரகு
43. சௌமிய – மத்ஸ்ய மூர்த்தி – அழகு
44. சாதாரண – கூர்மமூர்த்தி – பொதுநிலை
45. விரோதகிருது – வராஹ – மூர்த்தி – இதல்வீறு
46. பரிதாபி – – நிரசிம்ம – – மூர்த்தி – கழி – விரக்கம்
47. பிரமாதீச – வாமன – மூர்த்தி -நற்றலைமை
48. ஆனந்த – ஸ்ரீராமன் – பெருமகிழ்ச்சி
49. ராட்சச – பரசுராமன் – பெருமறம்
50. நள – பலராமன் – தாமரை
51. பிங்கள – கிருஷ்ணன் – பொன்மை
52. காளயுக்தி – கல்கி – கருமை – வீச்சு
53. சித்தார்த்தி – புத்தர் – முன்னிய – முடிதல்
54. ரௌத்திரி – துர்க்கை – அழலி
55. துன்மதி – யாதுதானன் – கொடுமதி
56. துந்துபி – ஸபரவர் – பேரிகை
57. ருத்ரோத்காரி – ஹனுமான் – ஒடுங்கி
58. ரக்தாட்சி – சாரதை – செம்மை(சரஸ்வதி)
59. குரோதன – தாக்ஷாயனி – எதிரேற்றம்
60. அட்சய – லஷ்மி – வளங்கலன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + sixteen =

Most Popular