Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalகடன் பிரச்சனை தீர மயிலம் முருகன் வழிபாடு!

கடன் பிரச்சனை தீர மயிலம் முருகன் வழிபாடு!

கடன் பிரச்சனை தீர மயிலம் முருகன் வழிபாடு!

மன அமைதி வேண்டி தவிப்பவர்கள் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபட்டால் நிச்சயம் மன அமைதி கிடைக்கும். இந்த கோவில் 1000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு உடைய முருகன் கோவில். மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்திருக்கிறது.

இத்திருத்தலம் தோன்றிய கதை:

சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலம் உருவானது . சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாகத் தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது.

மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ‘‘எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

விழாக்கள்:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப்

3 உற்சவராய் காட்சியளிக்கும் முருகப்பெருமான்:

மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி – தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது.

கடன் பிரச்சனை தீரும்:

மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் தீரும் .

திருமணம் கைகூடும்:

உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

Most Popular