சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமை என்னவென்று தெரியுமா?
எப்போதும், விநாயகப் பெருமானை எண்ணி வழிபடும் எல்லா நேரமும் நல்ல நேரமும், விசேஷமான நாளும் கூட. வாழ்வில் தேவையான அனைத்து வளங்களையும் தருபவர் விநாயகப் பெருமான். எனினும், சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் முழுக்க முழுக்க கணபதிக்கே உரிய விரதம். இதனை மேகொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்த குறையும் வராது என்பது ஐதீகம்.
சங்கடங்கள், அனைத்தையும் தீர்க்கக் கூடிய இந்த சதுர்த்தி நாளன்று விரதமிருந்து வழிபட்டால் வேண்டியது மட்டுமல்ல, நமது வாழ்விற்கு தேவையான அத்தனை வளங்கள், வரன்கள் கிடைத்துவிடும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் 4ஆம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கடம் என்றல் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்பது பொருள். அப்படி நமக்கு நேரும் துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளுக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மற்றும் மாசி மாதங்களில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தி நாள் மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த சங்கடஹர சதுர்த்தி விரத த்தை கடைபிடிக்கவே அங்காரகன் என்ற செவ்வாய் பகவான் நவக்கிரகங்களில் ஒருவராக பதவி ஏற்றார்.
கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் கூட சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர். இவ்வளவு ஏன், சிவபெருமானைப் பிரிந்த சக்தி கூட விநாயகப் பெருமானின் இந்த விரதத்தை கடைபிடித்து தான் சிவபெருமானை அடைந்தார் என்று கூறப்படுகிறது.
பாண்டவர்கள் கூட விநாயகப் பெருமானின் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்துதான் வெற்றியைப் பெற்றுள்ளனர். கிருத வீரியன் இந்த விரதம் மேற்கொண்டு கார்த்த வீரியன் என்ற மகனைப் பெற்றான். இப்படி ஒவ்வொருவருக்கும் வெற்றியைக் கொடுத்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.
அழகில் சிறந்து விளங்கிய சந்திர பகவானின் விநாயகப் பெருமானின் உருவத்தைக் கேலி கிண்டல் செய்த காரணத்தால், அவரது ஆணவம் கண்டு விநாயகப் பெருமான் சாபமிட்டார். அந்த காலகட்டத்தில் தான் சனி பகவானை இன்று போய் நாளை வா, இன்று போய் நாளை வா என்று சொல்லிச் சொல்லி அவரது பிடியிலிருந்து விநாகப் பெருமான் தப்பித்து வந்தார். தனது தவறை உணர்ந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில் தான் அனுக்கிரஹம் பெற்றான். ஆகையால், இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம்.
