இன்று தைப்பூசம்
திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி ஸ்வாமிகளின் வேண்டுதலுக்கு இரங்கி தூணிலிருந்து வெளிப்பட்டதை விளக்கும் திருப்புகழ்,,,,,
“அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள மலையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட
வனச மாமியாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளியால் நீடு
கருத லார்கள் மா சேனை பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக முடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே,,”
கதாயுதத்தை எப்போதும் வைத்திருப்பவனாகிய வீமசேனனால் எதிர்க்கப்பட்டதும்
ஆயுதங்களால் மிகுந்த வலிமையுள்ளதுமாகிய பகைவர்களுடைய சேனைகள்
அழியுமாறும்,,பயத்தினால் கதறுகின்ற பசுக் கூட்டங்கள் அச்சம் நீங்கி மீளும்
பொருட்டும்,,,,பொன்மயமான சங்கத்தை (புல்லாங்குழலை ) ஓலித்தவரும்,,,
அலைகள் மோதுகின்ற கடலால் சூழப்பெற்ற இப்பூமண்டலத்தைத் தனது
திருவடியினால் அளந்து மூடியவரும்,,கருட வாஹனத்தில் வருபவரும் ஆகிய
திருமாலின் திருமருகரே !! ஒளிமிக்க இரத்தின மாலையை அணிந்த பிரபுடதேவ
மன்னர்பிரானுடைய மனமும் மகிழ்ச்சியினால் ஆடும்படி எழுந்தருளியுள்ள
தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே,,! அதல உலகிலே வாழ்கின்ற
ஆதிசேடன் தனது பணா மகுடங்களை விரித்துஆடவும் மண்ணுலகமும் மகா
மேருகிரியும் மிகவும் ஆடவும்,,,சிவத்தைவிட்டுப் பிரியாதிருக்கிற காளிதேவி
ஆடவும்.,,,அக்காளிதேவியுடன் முன்னால் உவகம் அதிர கையையும் காலையும்
வீசி வாது புரிந்த நடராஜமூர்த்தி இடபவாகனத்தின் மீது ஆடவும்,,இனிய வேணு
கானம் புரியும் கலைமகள் ஆடவும்,,,உமது மாமியாராகிய இலக்குமியும்
மாமனாராகிய திருமாலும் ஆடவும் மயில் தனது தோகையை விரித்து ஆட
அதன் மீது தேவரீர் ஆடிக் கொண்டு வர வேண்டும்,,,,,
இத்திருப்புகழ் அருணகிரிநாதருடைய வரலாற்றின் ஒரு பகுதியைக்
குறிக்கின்றது,,,,,
திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகன் இருந்தான்,, அவன் திருவண்ணாமலையை அரசுபுரிந்த பிரபுட தேவ மன்னன் முன் தான் வழிபடும் கடவுளைச் சபையில் வரவழைத்துக் காட்டுவதாகவும் ,,,அது போல் அருணகிரியாரும் காட்டுதல் வேண்டும் என்று வாதிட்டான்,,,இரவு முழுவதும் சம்பந்தாண்டான் வாய் வலிக்க அழைத்தும் காளிதேவி வரவில்லை,,,
மன்னன் வேண்டுகோளுக்கு மரியாதை தந்து சிவகங்கையில் மூழ்கி,,
சிவகங்கைக்கரையில் இருக்கும் பதினாறு கால் மண்டபத்தில் ஈசானத்தூண்
அருகில் நின்று ” அடியேன் பொருட்டுக் கருணை வடிவான தாங்கள் இத்தூணிலிருந்து வெளிப்பட்டுக் காட்சி தர வேண்டும் ” இன்ன இன்ன முர்த்திகளுடன் ஆடிக்கொண்டு வந்து காட்சி தர வேண்டும் என்று “அதல சேடனாராட “என்ற இந்ததிருப்புகழைப் பாடினார்,,,, உடனே ஆறுமுகப்பெறுமான் வந்து காட்சி தந்து அருளினார்,,,
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயில்மிசை வந்தெனை யாட் கொளல்
சகமறி யும்படி காட்டிய பெருமாளே,,
என்று அருணகிரியார் பாராட்டினார்,,,,,
