உண்மையில் முருகன் என்றால் யார்?

248

ஸ்ரீசுப்ரமணிய யந்திர ரகசியம்

“சுக்கிற்க்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை”

இதை அனைவரும் கேள்விபட்டிருப்போம் அல்லது படித்திருப்போம் .

உண்மையில் முருகன் என்றால் யார் அது என்ன தத்துவத்தை உள்ளடக்கியது . அதன் விஷேசமான சக்தி என்ன ?
உண்மையிலேயே சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லையா ?

ஏன் சுப்ரமணியருக்கு இந்த அளவுக்கு விசேஷம் என்பதை இங்கே காணலாம் .

சிவன் சக்தி
சிவன் இல்லையேல் சக்தி இல்லை , சக்தி இல்லையேல் சிவன் இல்லை .

புத்தியும் நீ ! முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச் சத்தியும் நீ !
சிவமாய் எங்குமாய் நின்ற சர்வமுகச்
சித்தியும் நீ ! அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு முத்தியும் நீ !
அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே !
அகத்தியர்

சிவனும் சக்தியும் இணைவே பிரபஞ்சத்திற்கு மூல காரணமாகவும் மூலமாகவும் அமைகிறது .

குறியீடுகளில் மேல் நோக்கிய முக்கோணம் சிவனாகவும் , கீழ் நோக்கிய முக்கோணம் சக்தியாகவும் பாவிக்க படுகிறது .

இந்த இரண்டு முக்கோணங்களின் இணைவே அறுகோணமாக மாறுகிறது .

அறுகோணம் என்பது ஆறுமுகன் முருகனின் வடிவம் . இரண்டு இரு பெரும் சக்திகள் இணைந்து அதாவது இரண்டு முக்கோணங்கள் இணைந்து ஆறு கோணமாக அதன் சக்தியை வெளிபடுத்துகின்றன.

அந்த சக்தியின் பிரளயமே முருகன் , ஆறுமுகன் .

சிவன் என்றும் சக்தி என்றும் தனி தனியே வழிபட வேண்டாமல் முருகனையே வழிபட்டால் இருவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

சுப்ரமணிய யந்திரம் சிவன் சக்தி இருவரையும் வழிபட்ட பலனை வழங்க கூடியது .

சத்ரு ஸம்ஹாரத்திற்கு ஒரு முகம்
அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்
ஞானம் அளிக்க ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்

சுப்பிரமணியம் என்பது என்ன ?

நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள
ஒரு மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது.

இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள்.

இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள். ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள்.

ஆயினும் “சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”

என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார்  வள்ளலார்.

சரவணபவ எனும் மந்திரம் மிக சக்தி வாய்ந்தது. ஓதுவோர்க்கு என்னென்ன கிடைக்கும்?

ஸ – லட்சுமி கடாக்ஷம் (செல்வம்)
ர – ஸரஸ்வதி கடாக்ஷம் (கல்வி)
வ – போகம் (இன்பம்)
ண – சத்ரு ஜெயம் (வெற்றி)
ப – ம்ருத்யு ஜெபம் (முக்தி)
வ – நோயற்ற வாழ

ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.

திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம்

காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன்.

ஷட்விகாரம்

உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.

ஷட்கோசம்

அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன்.

ஷட்ரசம்

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன்.

ஷட்ஸூத்ரம்

ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன்.

ஷண்மதம்

காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை !

ஷட்வேதாங்கம்

சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.

ஷண்முகம்

ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்கு மூலமானவன் அவனருள் இன்றி பஞ்ச பட்சி கை கூடாது என்பதே உண்மை .

திருசெந்தூர் கோவிலில் உள்ள பஞ்ச லிங்கங்கள் அதன் பெருமை சொல்லும் .

குரு நாதர் அகஸ்தியருக்கே குருவாய் விளங்குபவர் .தகப்பனுக்கே ஞானம் அருளிய தகப்பன் சாமி

—————————