Tuesday, November 7, 2023
HomeAanmeega Thagavalgalநவ கிரகங்களும் நன்மை தீமைகளும்.

நவ கிரகங்களும் நன்மை தீமைகளும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அது உண்மை தான்.ஒருவனை கோடீஸ்வரனாக ஆக்குவதற்கு பிற கிரகங்கள் இருக்கலாம்.ஆனால் கிடைத்த செல்வத்தை காக்க வெற்றியை தக்க வைக்க புத்திசாலித்தனம் வேண்டும் அல்லவா??அதை தருபவர் தான் புதன்.அவர் தரும் நன்மை தீமைகள் குறித்து காண்போம்.

புதன் தரும் நன்மைகள்.

ஒருவருக்கு வயதை தாண்டிய பின்பும் இளமையாக தோற்றம் அமைகிறது என்றால் அவருக்கு புதன் வலிமையாக இருக்கிறது என்று அர்த்தம். மாமன் மகளை அல்லது மகனை நேசிக்கும் ஒருவருக்கு புதன் வலுவாக இருந்தால் அது திருமணத்தில் முடியும்.
புத்திசாலித்தனம் என்பது இன்றைய காலகட்டத்தில் கட்டாயமான தகுதியாய் மாறிவிட்டது.அது இருந்தால் தான் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.வியாபார தந்திரம்,ஒற்றன்,அறிவியல், தொழில் நுட்பம் என புதனின் காரக பலன்களை சொல்லி கொண்டே போகலாம்.அவ்வளவு துறைகள் புதன் வசம் உள்ளன. மேலும் விளம்பர யுக்தி ,வியாபார தந்திரம் போன்றவற்றை திறம்பட கொடுத்து அருள்வது புதனே.புது புது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் நமக்கு கொடுத்தருள நமக்கு உதவி செய்பவர் புதன்.
பசுமை நிறத்தின் காரகராகவும் இருக்கும் புதன் நரம்பு மண்டலத்திற்கு காரகம் வகிக்கிறார்.ஜோதிடம்,எழுத்து,எழுத்தாளர்களை குறிப்பவர் புதனே.சரியான நேரத்தில் சரியான முடிவை வாழ்வில் எடுக்க புதனின் அனுக்கிரகம் தேவை.

இதையெல்லாம் விட வித்யாகாரகன் என்னும் கல்விக்கு காரகம் வகிப்பது புதன் தான்.கல்வியா செல்வமா வீரமா என்று கேட்டால் கல்வி தான் முதலில் நிற்கும்.எனவே புதன் ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்று நிற்பது அவசியம்.

புதன் தரும் தீமைகள்.

மனிதனுக்கு புத்திசாலித்தனமும் சமயோஜித புத்தியும் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும். அதீத புத்திசாலித்தனம் அப்பாவிகளை ஏமாற்ற வைக்கும்.கர்மாவை அதிகரிக்கும்.சுயநலத்தை அதிகரிக்கும்.

மனிதனுள் புத்திசாலித்தனம் உண்டு. ஆனால் புத்திசாலித்தனத்தினுள் மனிதம் இருப்பது இல்லை.புதன் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத கிரகம் ஆவார்.பாபத்துவம் பெற்ற புதன் குறுக்கு வழியில் செயல்பட வைப்பார்.நரம்பு தொடர்பான நோய்களையும் புதனே தருவார்.

ஒரு ஆணை ஆண் தன்மை இழக்க வைப்பதிலும் புதனின் பங்கு உள்ளது.பக்க வாதம் போன்ற நோய்களையும் தருவார்.எதையும் நேர்வழியில் செய்யாமல் குறுக்கு வழியை தேடும் கிரகங்களில் புதனும் ஒன்று.சில நிலைகளில் ராகுவின் சிஷ்யனை போலவே செயல்படுவார்.அது மனிதனுக்கு எல்லா நிலைகளிலும் நன்மை தராது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 8 =

Most Popular