Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalபயம் போக்கும் நிமிஷாம்பாள் வழிபாடு!

பயம் போக்கும் நிமிஷாம்பாள் வழிபாடு!

பயம் போக்கும் நிமிஷாம்பாள் வழிபாடு!

பக்தர்களின் கோரிக்கையை கணப் பொழுதில் நிறைவேற்றும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாம் என்னும் தலத்தில் அருள்புரிகிறாள். மனதில் நினைத்தாலே பயமில்லாத வாழ்வு அளிக்கும் அம்பிகை இவள்.

முக்த ராஜன் என்னும் அம்பிகை பக்தர் இப்பகுதியை ஆட்சி செய்தார். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். ஆனால் அவனை அடக்க முடியவில்லை. இஷ்ட தெய்வமான ஆதிபராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார் மன்னர். அவரது பக்திக்கு இணங்கி அம்மனும் காட்சியளித்தாள். மன்னரின் கோரிக்கையை ஏற்று அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அசுரன் சாம்பலானான். தனக்கு அருள் செய்த அம்மனுக்கு கோயில் எழுப்பினார் மன்னர். ‘நிமிஷாம்பாள்’ என்னும் பெயருடன் இங்கு அருள்புரியத் தொடங்கினாள். ‘கண நேரத்தில் வரம் அளிப்பவள்’ என்பது பொருள்.

லலிதா சகஸ்ர நாமத்தில் 281வது நாமாவாக ‘ஒன்னுமஷே நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவல்லே நம:’ என நிமிஷாம்பாள் போற்றப்படுகிறாள். வைகாசி வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி நடக்கும். அன்று 108 கலசாபிஷேகம், துர்கா ஹோமம் நடக்கும். ‘கிருஷ்ண சிலா’ என்னும் கருமை நிறத்துடன் சூலம், உடுக்கை தாங்கி கிழக்கு நோக்கியிருக்கிறாள். தலை மீது தர்மச் சக்கரமே குடையாக உள்ளது. மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் அம்மனின் முன் சக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.

பவுர்ணமியன்று பக்தர்கள் விரதமிருந்து அம்மனைத் தரிசிக்கின்றனர். திருமணத் தடை, எதிரிபயம் நீங்கவும், குழந்தை பாக்கியம், வழக்கில் வெற்றி பெறவும் விரதம் அனுஷ்டிக்கின்றனர். துர்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பால் அபிஷேகம் நடக்கிறது. கோயில் வாசலில் ஓடும் காவிரிக்கரையில் விநாயகர் சன்னதி உள்ளது.

விநாயகர், சிவன், பார்வதி, சூரியன், விஷ்ணு தெய்வங்களையும் இணைத்து சனாதன தர்மத்தை ஆதிசங்கரர் ஏற்படுத்தினார். அதைப் பிரதிபலிக்கும் விதமாக இங்கு ஐந்து சன்னதிகள் உள்ளன. சூரியன், அனுமன் சன்னதிகள் மேற்கு நோக்கி உள்ளன. கேரள பாணியில் அர்ச்சகர்கள் அமர்ந்தபடி பூஜை நடத்துகின்றனர். எல்லா சன்னதியிலும் பக்தர்களுக்கு தீர்த்தம் தரப்படுகிறது. எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் கஞ்சாம்.

விசஷே நாட்கள்: நிமிஷாம்பாள் ஜெயந்தி, மாத பவுர்ணமி, நவராத்திரி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − four =

Most Popular