Wednesday, October 18, 2023
HomeArthamulla Aanmeegamஸ்படிக மாலையின் பயன்கள்!

ஸ்படிக மாலையின் பயன்கள்!

ஸ்படிக மாலையின் பயன்கள்!

மனதின் 7ம் அறிவை உயிர்க்கச் செய்யும் ஸ்படிக மாலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உடலின் வெப்பநிலையை சீராக்கி, தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் ஸ்படிக மாலை, நம் மனதில் 7ம் அறிவை உயிர் பெறச் செய்கிறது என்றால் அது மிகையாகாது. ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது.

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது?

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.

ஸ்படிகமாலை கோர்க்கும் முறை:

ஸ்படிக மணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது). தனித்தனியாக அணிந்து கொள்ளலாம். தரமற்ற ஸ்படிகமணியை மாலையாக கோர்க்கக் கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும்.

ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்?

மனிதர்களாகிய நாம் நாள் ஒன்றுக்கு உள்வாங்கும், சுவாசத்தின் எண்ணிக்கை சராசரியாக 21,600 முறை. ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் சுமார் முப்பதாயிரம் வரை விடுவதாக மருத்துவ அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

அறிவியல் ரீதியான பலன்கள்

ஸ்படிக மாலை உடல் வெப்பநிலையை சீரான சரியான அளவில் இருக்க வைக்கும். நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை. இந்த மகா மேரு ஸ்படிகத்தை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து அபிஷேகம் செய்து வந்தால் சகல செல்வத்துடன் லஷ்மி கடாட்சம் சேரும் என்பது ஐதீகம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − five =

Most Popular