பெண்களின் படைப்பும் உயர்வும் (சிவமஹா புராணத்திலிருந்து)

157

ஆதியில்,பிரம்மன் படைத்த உயிர்கள் விருத்தியடையாமல் இருந்தது.இதை கண்ட பிரம்மன் மிகவும் மனம் நொந்து ஆண்பெண் சேர்க்கையால் தான் படைப்பு விருத்தியடையும் என்று உணர்ந்தான்.ஆயினும் ,பரமேஸ்வரனால் இன்னும் பெண் இனம் படைக்கப்படாமலிருந்ததால்,தானே சுதந்தரமாக பெண்களை படைக்க சக்தியற்றவனாகி,சர்வேஸ்வரன் அருளில்லாமல் படைப்பு வ்ருத்தியடையாது என்பதை உணர்ந்து சூக்ஷ்மமானதும்,தூய்மையானதும்,இனிமையானதும்,நிர்குணமானதும்,நிஷ்ப்ரபஞ்ச,நிஷ்கள,நிரந்தர நித்யமானதும்,ஈஸ்வரனை எப்போதும் விட்டுப்பிரியாததுமாகிய பராசக்தி என்னும் உமாதேவியை பாகமாகவுடைய பரமேஸ்வரனை இதயத்தாமரையில் இருத்தி பிரம்மன் கடுந்தவத்தில் ஆழ்ந்தான்.

தம் த்ருஷ்ட்வா பரமம் தேவம் தமஸ: பரமவ்யயம்/
அத்விதீயமநிர்தேஷ்ய மத்ருஷ்யமக்ருதாத்மபி://
சர்வலோகவிதாதாரம் சர்வலோகேஸ்வரேஸ்வரம்/
சர்வலோகவிதாயின்யா சக்த்யா பரமயா யுதம்//
அப்ரதர்க்யமணாபாசமமேயமஜரம் த்ருவம்/
அசலம் நிர்குணம் சாந்தமனம்தாமஹிமாஸ்பதம்//
சர்வகம் சர்வதம் சர்வசதசத்வ்யக்திவர்ஜிதம்/
சர்வோபமானநிர்முக்தம் சரண்யம் சாஸ்வதம் சிவம் //
ப்ரணாம்யா தந்தவத்ப்ரஹ்மா சமுத்தாய க்ருதாஞ்சலி /

அப்போது,ஈஸ்வரன் அவன் தவத்திற்கு மகிழ்ந்து,தன்னுடைய ஓர் அம்சத்தால் அர்தநாரீஸ்வரமூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்தார்.அவ்வாறு தோன்றிய பராத்பரனும்,ஜகத்காரணனும்,அவ்யக்த ஸ்வரூபனும்,இரண்டற்றவனும்,பாவிகளுக்கு புலப்படாதவனும்,உலகங்களை உற்பத்திசெய்ப்பவனும், எல்லா உலகங்களுக்கும் தாயானவளை தன் பங்கில் கொண்டவனும்,ஸர்வவ்யாபியுமான பகவானை பிரம்மன் சாஷ்டாங்கமாக வணங்கி, மிகுந்த பக்தி ச்ரத்தையோடு,மதுரமான வ்யாகரணலக்ஷண சப்தத்தோடு கூடிய ஸ்தோத்ரங்களால் மஹேச்வரனையும் மஹேஸ்வரியையும் துதித்தார்.

ஈஸ்வர உவாச

வத்ச வத்ச மஹாபாக மம புத்ர பிதாமஹ/
ஞாதமேவ மயா சர்வம் தவ வாக்யஸ்ய கௌரவம்//
ப்ரஜாநாமேவ ப்ருத்த்யர்தம் தபஸ்தப்தம் த்வயாதுனா/
தபஸா’னென துஷ்டொஸ்மி ததாமி ச தவேப்சிதம்//
இதயுக்த்வா பரமோதாரம் ஸ்வபாவமதுரம் வச:

அவன் செய்த ஸ்தோத்ரத்தில் மகிழ்ந்த பரமேஸ்வரன்,

“குழந்தாய்! உன் துதிக்கு மகிழ்ந்தேன்.நீ படைத்த உயிர்கள் விருத்தியடையும் பொருட்டு நீ தவம் செய்தாய்.உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்”,என்றுகூறி தமது இடதுபாகத்திலிருந்து, வேதமுணர்ந்தோரால் திவ்யகுணமுடைய பராத்பரை,பராசக்தி என்று போற்றப்படுபவளும்,பிறப்பு,இறப்பு மற்றும் மூப்பற்றவளாகிய லோகமாதாவும்,மனோவாக்காயங்களுக்கு எட்டாதவளுமான அம்பிகையை வெளிப்படுத்தினார்.

தன் மகிமையால் அனைத்தையும் வ்யாபித்துள்ள அந்த அம்பிகை ஒரு வடிவத்தில் அடங்கினவள் போல் காட்சியளித்தாள்.இந்த பிரபஞ்சத்தையே தன் மாயையால் மோஹிக்க செய்ப்பவளும் பிறப்பற்றவளுமாகிய அவள் தனது நாயகனின் உடம்பிலிருந்து பிறந்தவள் போல் தோன்றினால்.

ப்ரஹ்மோவாச

தேவி தேவேந ஸ்ருஷ்தோ’ஹ மாதோவ் சர்வஜகன்மயி/
பிரஜாசர்கே நியுக்தஸ்ச ஸ்ருஜாமி சகலம் ஜகத்//
மனசா நிர்மிதா: சர்வே தேவி தேவாதயோ மயா/
ந வ்ருத்திமுபகச்சந்தி ஸ்ருஜ்யமானா: புன: புன://
மிதுனப்ரபவாமேவ க்ருத்வா ஸ்ருஷ்டிமத: பரம்/
சம்வர்த்தயிதுமிச்சாமி சர்வா எவ மம ப்ரஜா://
ந நிர்க்கதம் புரா த்வத்தோ நாரீணாம் குலமவ்யயம் /
தேன நாரீகுலம் ஸ்ரஷ்தும் சக்திர்மம ந வித்யதே //
ஸர்வாசாமேவ சக்தினாம் த்வத்த கலு ஸமுத்பவ:/
தஸ்மாத்ஸர்வத்ர ஸர்வேஷாம் சர்வசக்திப்ரதாயினீம்//
த்வாமேவ வராதாம் மாயம் ப்ரார்த்தயாமி சுரேச்வரீம்/
சராசரவிவ்ருத் யார்தமம்செனைக்கென சர்வகே/
தக்ஷஸ்ய மம புத்ரஸ்ய புத்ரி பவ வர்தினி//

தேவியை நோக்கி பிரம்மன் கூறினான்:

ஹே தேவி! எம்பெருமானால் நான் ஆதியில் படைக்கப்பட்டு,அவரால் ஸ்ருஷ்டி தொழிலை செய்வதற்காக நியமிக்கப்பட்டேன்.நான் மனத்தால் தேவர்களையும் சகல உலகங்களையும் படைத்தேன்.ஆனால்,என் படைப்புகள் ஏதும் விருத்தியாகவில்லை.ஆகையால்,இனி ஆன் பெண் சேர்க்கையால் படைப்புகளை விருத்தி
செய்ய வேண்டும் என்று இச்சித்தேன்.முன்பு,பரமேஸ்வரனால் பெண் இனம் ஸ்ருஷ்டிக்கப்படாததால்,எனக்கு அவர்களை படைக்க சாத்தியப்படவில்லை.அணைத்து சக்திகளும் உன்னிடமிருந்து தான் தோன்றுகின்றன,ஆதலால் உன்னை நான் வேண்டிப்பணிகின்றேன்.அணைத்து சராசரத்தின் வ்ருத்தியின் பொருட்டு,உனது ஓர் அம்சத்தால் என் புத்ரனான தக்ஷனுக்கு மகளாய் அவதரிக்க வேண்டும்.

அவன் வேண்டுகோளை ஏற்று அம்பிகை,தமது புருவமத்தியிலிருந்து ஒரு சக்தியை உண்டாக்கினாள்.பரமசிவன் அந்த சக்தியை நோக்கி,” நீ ப்ரம்மனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக”என்று கட்டளையிட்டு அம்மையோடு திருக்கயிலாயம் திரும்பினார்.தேவியின் அம்சமான அந்த சக்தியும் தக்ஷனுக்கு மகளாகத் தோன்றினாள்.அன்றுமுதல்,ஆண்பெண் சேர்க்கையின் மூலம் ஸ்ருஷ்டி விரிவடைந்தது.

இந்த சரிதத்தை கேட்டவர்களும் சொன்னவர்களும் நல்ல சந்ததிகளை
பெற்று நீடுழி வாழ்வார்கள்.