Friday, October 27, 2023
HomeAanmeega Thagavalgalஅர்த்தமுள்ள இந்துமதம் - பொய்யில்லா வாழ்க்கை

அர்த்தமுள்ள இந்துமதம் – பொய்யில்லா வாழ்க்கை

திறந்த புத்தகமாக நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டால், அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்வதற்கு விசயம் கிடைக்காது.

“இவன் இப்படிச் செய்தான், அப்படிச் செய்தான்” என்று எதையும் ரகசியமாகப் பேச முடியாது.

நாம் இல்லவே இல்லை; செய்யவே இல்லை என்று மறுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

“ஆம், செய்தேன்” என்று ஒரு வார்த்தையின் மூலம், பல விமர்சனங்கள், பல விசயங்கள், பல வார்த்தைகள் அடிபட்டுப் போகின்றன என்பதை மறந்து விடக்கக் கூடாது.

என்று கூறுகிறார்.

இப்புத்தகத்திலேயே எனக்கு ரொம்பப் பிடித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் நினைத்துப் பாருங்க.. நமக்கு என்று ரகசியம் இல்லையென்றால் அது எப்படி ஒரு அற்புதமான உணர்வு!

யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை, எதை நினைத்தும் கவலைப்பட வேண்டியதில்லை, மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்று யோசிக்கத் தேவையில்லை. நினைத்தாலே சுகமாக இருக்கிறது.

இதைப் படித்ததும் நான் செய்த முதல் வேலை, என்னுடைய கணினியில் இருந்த Porn காணொளிகளை நீக்கியது தான் 🙂 . இவை இருந்தால், யாராவது பார்த்து விடுவார்களோ! பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்று ஆயிரம் யோசனை இருக்கும்.

அதோடு நான் தனிப்பட்டது என்று நினைத்த மின்னஞ்சல்கள் ஒன்றிரண்டையும் நீக்கி விட்டேன். இதன் மூலம் எனக்கு மட்டுமல்லாது சம்பந்தப்பட்டவருக்கும் பாதிப்பு நேரலாம். நினைவுக்காக வைத்து இருந்தாலும், ஆபத்து தான்.

இணையக் கணக்கை எளிதாக ஹேக் செய்து விடுவதால், எதுவும் சாத்தியமே! அப்படி இருக்கும் போது தேவையில்லாத ஒன்றை ஏன் பயந்து கொண்டு வைத்து இருக்க வேண்டும்?!

தற்போது அனைத்தையும் நீக்கி விட்டேன். மனது தெளிவாகி விட்டது. கண்ணதாசன் அவர்கள் கூறியது உண்மை தான் 🙂 .

இங்கே என்ன எழுதுகிறேனோ அது தான் நான். இங்கே ஒரு மாதிரி எழுதி விட்டு நேரில் வேறு மாதிரி இருக்க மாட்டேன். எனவே, இவை எனக்கு நெருக்கடி இல்லாத ஒரு நிலையைத் தருகிறது.

போலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, சுதந்திரமான உணர்வை நமக்குத் தருகிறது.

எனவே, கண்ணதாசன் அவர்கள் கூறியது போலத் திறந்த புத்தகமாக, போலியாக நடிக்காமல் இருந்து விட்டால், நம்மை விமர்சிக்க ஒன்றுமே இருக்காது. அப்படியே விமர்சித்தாலும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது.

சுருக்கமாக, மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை 🙂 .

முழுமையாக இது போல இருக்க முடியவில்லையென்றாலும் இருக்க முயற்சிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + nineteen =

Most Popular