இராமாயணத்தில் சீதா தேவி சிறைவைக்கப்பட்ட சீதா எலியா

141

ராமாயணத்தின் மிக முக்கிய நோக்கமே கடவுளே அவதாரமாக தோன்றி எந்த ஒரு சவாலான சூழலிலும் அற நெறிகளை பின்பற்றி, இந்த மானுட சமூகம் அறத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக அமைந்த ஒரு அற்புத காவியம்.

இந்து தர்மத்தில் ராமாயணம், மகாபாரதம் என இரு காவியங்கள் இருந்தாலும், இதை எல்லாம் செய்தால் அறத்தின் படி வாழலாம் என ராமாயணமும், இவற்றை எல்லாம் செய்யாமல் இருந்தால் அறத்தை கடைப்பிடித்து வாழமுடியும் என உணர்த்துவதாக உள்ளது.

இதனால் தான் அறிஞர்கள் ராமாயணத்தை விட மிக சுவையான நிகழ்வுகள் அடங்கிய மகாபாரதத்தை விட, அற வழியை மட்டும் போதிக்கும் ராமாயணம் சிறந்ததாகக் கருதுகின்றனர்.

ராமாயணத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் காட்டுக்குச் சென்ற போது, சீதையை ராவணன் கவர்ந்து இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறைபிடித்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்த அசோக வனம் இப்போது எப்படி இருக்கிறது. அதன் இயற்கை அழகு எப்படி இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதா பிராட்டி, அசோக வனத்தில் வைக்கப்பட்டிருந்தார். சீதா தேவி இருந்த அந்த இடம் தற்போது சீதா எலியா என அழைக்கப்படுகிறது.

ராமாயணத்தில் அசோக வனம் (காடு) என அழைக்கப்பட்ட நிலையில், இன்றும் இந்த சீதா எலியா பகுதி மலை காடு சூழ இயற்கை எழில் ததும்பக் கூடிய இடமாக காட்சி அளிக்கின்றது.

இங்கு சீதா தேவி மூலவராக அமைந்த ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு பின் மலைக் காடு பகுதி அசோக வனம் என அழைக்கப்படுகிறது. இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவி, மலைக்கு கீழே ஓடையில் வந்து நீராடினார் என நம்பப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான இந்திய கோயில்களை தரிசனம் செய்து அருள் பெறுவோம்

இலங்கையின் மலையகத்தில் சீதாதேவிக்காக சீதை அம்மன் கோவில் அமைந்துள்ளது, இது நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், சுக்கலை தாவரவியல் பூங்காவிலிருந்து 1 கிமீ தொலைவிலும் இந்த ‘சீதா எலியா’ என்ற இடம் அமைந்துள்ளது.

இராவணனின் யானையின் கால்தடங்கள்:
இந்த பகுதியில் காணப்படும் பல வட்டமான தடங்கள், இராவணனின் யானையின் கால்தடம் என கூறப்படுகிறது. சீதா தேவியைப் பார்க்க யானையில் இராவணன் வந்ததாக தெரிகிறது.

அனுமனின் தடம்
அதே போல் சீதா தேவி இங்கு ஓடும் ஓடையில் நீராட வந்தாக கூறப்படுகிறது. அங்கு உள்ள பாறைகளில் சில கால் தடங்கள் காணப்படுகின்றது. அது அன்னை சீதாவை சந்தித்து, ராமபிரான் கொடுத்து அனுப்பிய மோதிரத்தை காட்டி, நான் உங்களின் சேவகன், உங்களை விரைவில் மீட்க இராமன் வருவார் என கூறி சென்ற தாக கூறப்படுகிறது. அப்படி அசோக வனத்திற்கு வந்த அனுமனின் கால் தடம் தான் இந்த கோயிலுக்கு அருகில் உள்ள பாறையில் இருக்கும் கால் தடம் என நம்பப்படுகிறது.

இதை உணர்த்தும் வகையில் சீதா தேவியை அனுமன் வணங்குவது போல சிலையும் இங்கு வைக்கப்பட்டு, அதன் குறிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ளது.