பைரவரை வழிபாடும் முறை :

212

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்

இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)

எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்

எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள் ,

எக்கசெக்கமான சிக்கலில் மாட்டி கொண்டவர்கள்

பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய
முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள்
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்

ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்
இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம்

தினமும் பைரவருக்கு ஒரு சாதாரண விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்

தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 விளக்கு போட வேண்டும் அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம்

( ஆனா பலன் கிடைக்க தாமதம் ஆகலாம் )

விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை

அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும்

வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும்

தெரியும் .

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில்

வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .

காசியில் இருக்கும் பைரவரில் இருந்து சின்ன கோவில்களில் இருக்கிற
பைரவர் வரைக்கும் ஒரே சக்திதான்

நிபந்தனை :

வழிபாட்டுல அலட்சியம் கூடாது ,

திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போடணும் .

கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது