கோயில்கள் பற்றி அரிய தகவல்கள் – பகுதி 3!
81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை – மதுரை மீனாட்சி
82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர் – மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் – தடாதகைப் பிராட்டி
84. பழங்காலத்தில் மதுரை என்று அழைக்கப்பட்டது – நான்மாடக்கூடல், ஆலவாய்
85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம் – கடம்ப மரம்
86. மீனாட்சி ஆக இருப்பதாக ஐதீகம் – கடம்பவனக் குயில்
87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள் – திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப் பெருமாள்
88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் – குமரகுருபரர்
89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர் – மகாகவி காளிதாசர்
90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள் – சித்ராபவுர்ணமி
91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர் – ரோஸ் பீட்டர்
92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? – ஜுரகேஸ்வரர்
93. “நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்? – மாணிக்கவாசகர்
94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர் – இறையனார் (சிவபெருமானே புலவராக வந்தார்)
95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம் – சூலை நோய் (வயிற்றுவலி)
96.அம்பிகைக்கு உரிய விரதம் – சுக்கிரவார விரதம் (வெள்ளிக்கிழமை)
97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம் – தோணியப்பர் (சீர்காழி)
98.தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர் – திருநாவுக்கரசர்
99.”தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர் – சுந்தரர்
100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர் – சேக்கிழார்
101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர் – சேந்தனார்
102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம் – சண்ட தாண்டவம்
103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில் – குருந்த மரம் (ஆவுடையார்கோவில்)
104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம் -திருவானைக்காவல்
105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர் – சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
106.சிவசிவ என்றிட தீவினை மாளும்’ என்று கூறியவர் – திருமூலர்
107. பிருத்வி (மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள் – காஞ்சிபுரம், திருவாரூர்
108. சிவாயநம என்பதை …. பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர் – சூட்சும (நுட்பமான) பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் “ஐந்தெழுத்து மந்திரம்’.
109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர் – பூசலார் நாயனார்
110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம் – திருவாடானை (அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம் – மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர் – பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் – அகத்தியர்
114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம் – தட்சிணாமூர்த்தி
115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர் – திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
116. தஞ்சாவூரில் உள்ள மூலவர் – பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர் – சேந்தனார்
118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்’ என்று இறைவனைக் குறிப்பிடுபவர் – திருமூலர்
119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர் – திருஞானசம்பந்தர்
120. “நாமார்க்கும் குடியல்லோம்’ என்று கோபம் கொண்டு எழுந்தவர் – திருநாவுக்கரசர்
