Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalசந்ததி சாபத்தை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்!

சந்ததி சாபத்தை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்!

சந்ததி சாபத்தை தீர்த்து வைக்கும் எளிமையான வழிபாட்டு முறைகள்!

1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)…இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..

2. தொட்ட சிணுங்கி , முடக்கத்தான், துளசி, வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல், ஏவல், சூன்யும், வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.

3. வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர், அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும், மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் …

4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும்.

5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், அல்லது இளநீரை தரவேண்டும், இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.

6.வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு ) பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும்,குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.

7.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும்.

8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.

9.ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள்தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும்.

10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில் (தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரியபடுத்தும்.
நம்பிக்கையோடு மேற்கண்ட இந்த எளிய பரிகாரங்களை செய்து உங்கள் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று வாழுங்கள்.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்:
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.
சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும்.
அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல:கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே
ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி.

கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம்:

நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால்!
கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + seventeen =

Most Popular