Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalகந்த சஷ்டி ஸ்பெஷல்

கந்த சஷ்டி ஸ்பெஷல்

உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைப்பவரான பிரம்ம தேவரின் புத்திரர்களில் ஒருவர் காசிபர். அவர் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவமிருந்து சிவபெரு மானிடம் பல வரங்களைப் பெற்றவர்.
ஒரு சமயம் தேவர்கள் யாவரும் வலிமை இழ ந்து இருந்த காலத்தில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் வளர்ச்சிக் காகவும், அவர்களின் சக்திகளை அதிகரிக்கும் பொருட்டும் காசிபரின் தவ வலிமையால் அசுர குலம் தழைக்கும் பொருட்டு ஒரு திட்டம் செய்தார்.
தனது திட்டத்தை செயல்படுத்த அசுரகுலத்தை சேர்ந்த அசுரேந்திரன் மற்றும் மங்களகேசினி யின் தம்பதியருக்கு புதல்வியாக பிறந்த சுரஸையைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு தான் கற்ற பல மாய கலைகளையும் கற்று தந்தார் சுக்கிராச்சாரியார். கலைகளை கற்றுத்தேர்ந்த சுரஸையை பலவாறு சோதித்தார்.
சுக்கிராச் சாரியாரின் பல கடினமான செயல்க ளில் அகப்படாமல் கற்ற கலைகளை கொண்டு வெற்றி கொண்டாள் சுரஸை. அவளின் சாதுர்யமான அறிவையும், செயல்திறனையும் கண்ட சுக்கிராச்சாரியார், “இன்று முதல் மாயா என்று அழைக்கப்படுவாய்..” என்றும், பின்பு தனது மனதில் திட்டமிட்ட எண்ணத்தை பற்றி யும் கூறினார்.
மாயாவிடம் ” அசுரகுல தேவர்கள் வலிமையும், அழிவுமின்றி இருக்க வேண்டும் என்பதே உன் தந்தையான அசுரேந்திரனின் ஆசையும், எண்ணமும் ஆகும். ஆனால், அசுர குலத்தை சேர்ந்தவர்களோ தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். நம் குலத்தை சார்ந்தவ ர்களின் அழிவைத் தடுக்க இயலக்கூடிய வாய்ப்பு இப்பொழுது உனக்கு உள்ளது. நீ முயன்று அதில் வெற்றி பெற்று விட்டால் தேவர்களை நாம் அடக்கி நமது அதிகாரத் தையும், ஆட்சியையும் ஈரேழு உலகிலும் நிலை நாட்ட இயலும்..” என்றார்.
இதை கேட்டு ஆச்சரியம் மற்றும் அதே சமயம் மகிழ்ச்சியும் அடைந்த மாயா, ” அசுர குலம் தழைக்க நான் என்ன செய்ய வேண்டும்? குருவே..” என்று சுக்கிராச்சாரியாரிடம் கேட்டார். அதற்கு அவர் தன் மனதில் இருந்த திட்டத்தை மாயா அறிந்து கொள்ளும் விதமாக விளக்கி னார். பின்பு குருநாதரின் ஆணையை ஏற்று மாயா தன் தந்தையான அசுரேந்திரனிடம் தனது குருவின் திட்டத்தை பற்றி கூற அசுரேந்திரரும் அகமகிழ்ந்து தனது மகளை வாழ்த்தி அனுப்பினார்.
சுக்கிராச்சாரியாரின் திட்டம் என்பது காசிபரை மாயா மயக்கி அவரின் மூலம் மிகச்சிறந்த வலிமை மிகுந்த அசுர வீரர்கள் பலரை உருவா க்க வேண்டும் என்பதாகும். மாயா தனது மாய சக்திகளால் ஒரு புதிய மாளிகைகளையும், எழில் மிகுந்த நந்தவனத்தையும் காசிபர் இருந்த கானகத்தில் எழுப்பினாள். பின்பு காசிபரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே காசிப ரும் அங்கு வந்தார். பின்பு, மாயா தான் கற்ற மாய சக்திகளால் காசிபரை மயக்கினாள். இதனால் காசிபர் தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தார்.
காசிபரும், மாயையும் முதலாம் பொழுதில் மானுட உருவத்தில் இணைந்ததால் மானுட தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் பொழு தில் சிங்க உருவில் இருவரும் இணைந்ததால் சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் பொழுதில் யானை உருவில் இணைந்ததால் யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்கா ம் பொழுதில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்ததால் ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்த னர். இவர்களின் இணைவின்போது வெளிப் பட்ட வியர்வை மூலம் ஆயிரக்கண க்கான அசுர வீரர்கள் உருவாகினர்.
காலங்கள் வெகுவாக கடந்தன. காஷிபரின் புத்திரர்கள் இளம் வயதை எட்டினர். ஒரு சமயம் புத்திரர்கள் அனைவரும் தங்களது தந்தையையும், தாயையும் வணங்கி நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று வேண்டி நின்றனர்.
அவ்வேளையில் தந்தை யான காஷிபர் தர்ம வழிமுறைகளை பின்ப ற்றி வாழ வேண்டும் என்றும் ஈசன் ஒருவர் மட்டுமே அழிவில்லாத வர். அவரை எண்ணி நாம் வாழ்ந்து இந்த பிறவி பெருங்கடலை கடக்க வேண்டும் என்றும், தனது புத்திரர்களு க்கு ஆலோசனை கூறினார். பின்பு தனது தவ பணியை தொடர அவர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.
ஆனால், அவர்களின் தாயான மாயையோ தவ வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் விருப்பமி ல்லாமல் இவ்வுலகில் தோன்றிய நாம் சுகபோ கங்களுடன் எல்லா லோகங்களிலும் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தந்தையை காட்டி லும் தாய் சொல்லை பிள்ளைகள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினாள்.
பின்பு நீங்கள் அனைவரும் அசுரலோகம் சென்று அசுரர்களின் குருவான சுக்கிராச்சா ரியாரை சந்தித்து அவரிடம் ஆசிப்பெற்று ஆலோசனை கேட்டு அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார். தாயின் முடிவை கேட்ட பின் அனைவரும் விரைவாக பாதாள லோகத்தில் உள்ள சுக்கிராச்சாரியாரை காண விரைந்து சென்றனர்.
தவத்தில் இருந்த காஷிபர் கண் விழித்துப் பார்த்தபொழுது புத்திரர்கள் யாருமின்றி மாயை மட்டும் தனியாக நின்று கொண்டிரு ந்தாள். மாயை-யிடம் புத்திரர்கள் எங்கே என்று வினவியபோது மாயை நிகழ்ந்த யாவற்றை யும் காஷிபரிடம் எடுத்துரைத்தார். அதாவது சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைப்படியே தான் இங்கு வந்ததாகவும், அசுர குலத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே நான் தங்களு டன் இணைந்ததாகவும் கூறி அவ்விடம் விட்டு மறைந்து சென்றாள்.
அவள் மறைந்ததும், அவள் உருவாக்கிய அழகிய அரண்மனைகள் நந்தவனம் யாவும் மறைந்தன. மோக வயத்தால் அகப்பட்டு தான் செய்த தவறுகளால் இவ்வுலகம் அடையும் துன்பத்தை எண்ணி மனம் வருந்தினார் காஷிபர்.
அப்பொழுது அவரின் தந்தையான பிரம்ம தேவர் அவ்விடம் தோன்றி காமனின் இலக்கி ற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஆகவே நிகழ்ந்த தை எண்ணி மனம் வருந்தாமல் செய்த தவறுக்கான பரிகாரம் தேடுவாயாக என்று கூறினார். நீர் செய்த இச்செயலால் விளையும் அனைத்து துன்பத்திற்கான தண்ட னையை அளிக்கக்கூடியவர் சிவபெருமான் மட்டுமே. ஆகவே அவரை எண்ணி தவம் புரிந்து தண்டனையையும், மன்னிப்பையும் பெறுவாய் என்று கூறி மறைந்தார்.
தன் தந்தையின் கூற்றில் இருந்த உண்மை யை உணர்ந்த காஷிபரும் மனதை திடப்படு த்தி சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினார்.
அசுர லோகத்தில் இருந்த சுக்கிராச்சாரியாரை கண்ட அசுரர்கள் அனைவரும் அவரை வணங்கி ஆசிப்பெற்றனர். பின்பு மானிட உருவம் கொண்ட சூரபத்மன் சுக்ராச்சாரியா ரிடம் தகுந்த ஆலோசனை பெற்று சிவபெருமா னை நோக்கி கடும்தவம் புரிய தொடங்கினான்
காலங்கள், யுகங்கள் என அனைத்தையும் மறந்து சிவபெருமானை எண்ணி அசுரனான சூரபத்மன் கடுந்தவம் புரியத் தொடங்கினான். தேவர்கள் அனைவரும் அவனின் தவத்தினை கண்டு மனதில் ஒரு விதமான அச்சத்தை கொண்டனர். தேவர்கள் அனைவரும் இணைந்து சூரபத்மனின் தவத்தை கலைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அவர்களால் அவனது தவத்தை கலைக்க இயலவில்லை.
காலங்கள் விரைய எம்பெருமான் வருகை இல்லாமையால் இவ்வுலகில் நான் வாழ்ந்து என்ன பயன் என எண்ணி தன் முன் ஒரு யாக வேள்வியை உருவாக்கினான் சூரபத்மன். தான் உருவாக்கிய வேள்வியில், தனது அங்க ங்களை வெட்டி வேள்வி தீயில் எறிந்தான்.
இறுதியாக தனது சிரத்தை வெட்டும்போது மாபெரும் போராளியுடன் எம்பெருமான் அவருக்கு காட்சியளித்தார்.” உன் தவத்தாலும், மன உறுதியாலும் யாம் மனம் மகிழ்ந்தோம். வேண்டும் வரத்தைக் கேட்பாயாக..” என்றார் எம்பெருமான்.
ஷண்முகா சரணம்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =

Most Popular