Saturday, November 4, 2023
HomeAanmeega Thagavalgalசித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம் பகுதி-2!

சித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம் பகுதி-2!

சித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம் பகுதி-2!

போகர்: ”ஐயனே, சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு எப்போது விலகுகிறாள்?

அகத்தியர்: ”நண்பனே. இங்குதான் திருமண வைபவத்தின்போது கன்னிகாதானம் செய்ய வேண்டிய முறையை பெரியவர்கள் விளக்குகிறார்கள்… கன்னியை அவளது தகப்பன் தானம் செய்து கொடுக்கும்போது அவளைத்தன் வலது துடையில் மட்டுமே அமர்த்திக்கொள்ள வேண்டும்…. இடது துடையிலோ அல்லது இரு துடைகளின் நடுவிலோ மணமகள் அமரக்கூடாது. ஆகவே, கன்னியை முறை மாற்றி தானம் செய்வதால்தான் சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள், புரிந்து கொண்டாயா…?

போகர்: ”புரிந்து கொண்டேன், சுவாமி, புவிவாழ் மக்களுக்கு இது மிகவும் பயன்படும் அல்லவா?

அகத்தியர்: ”அடுத்து வருபவள் ‘தான்யலக்ஷ்மி’. இவள் மனிதனுடைய வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக.

போகர்: ”ஜயனே, தான்யலக்ஷ்மி நம்மை விட்டு, எப்போது அகலுகிறாள்?

அகத்தியர்: ”ஊசிப்போன உணவு, எச்சில் உணவு, கல்லிருக்கும் உணவு இவைகளை ஏழைகளுக்கோ அல்லது கணவன்மார்களுக்கோ பெண்கள் படைத்தால், அவர்களை விட்டுத் தான்யலட்சுமி விலகி விடுகிறாள். பொதுவாக மற்றவர்கள் வயிற்றில் நாம் அடிக்கும்போது நம்மை விட்டு தான்யலட்சுமி அகன்று விடுகிறாள்.

”ஜயனே, அடுத்து, நம் நெஞ்சுப்பகுதியில் வசிப்பவள் ‘தைரியலக்ஷ்மி’ என்று நீ அறிய வேண்டும். நெஞ்சிலே நஞ்சை வைத்து, பொய்யும், புறமும் பேசித் திரிபவரை விட்டு தைரியலட்சுமி அகன்று விடுகிறாள் பாரேன். ஆகவேதான் பெண்கள் மாங்கல்யம் அணிவதும், அணிந்த மாங்கலயம் நெஞ்சிலே தவழ்வதும் கனவனுடைய ‘தைரியத்தை’ வளர்க்கும் என்கிறார்கள் பெரியவர்கள் புரிந்ததா, போகா?

போகர்: ”புரிந்தது, நாதா!. ‘மாங்கல்ய மகிமை’யைப் பற்றித்தான் தாங்கள் விரிவாகக் கூறியுள்ளீர்களே!” (‘’மாங்கல்ய மகிமை’ என்னும் புத்தகத்தில் காண்க)

அகத்தியர்: “ஆம் ஜயனே, அடுத்து வருபவள் ‘வித்யாலக்ஷ்மி’…. இவள் நம் கழுத்துப்பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக பொதுவாகவே, அனைவரும் கழுத்தில் ருத்திராக்ஷம் அணிந்துதான் தீரவேண்டும். அப்படி அணியவில்லை என்றால் வித்யாலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள்.”

போகர்: ”பெண்களானால் குருவே!

அகத்தியர்: ”பெண்கள் பஞ்ச பூதங்களின் ஆசி பெற்று வந்த தாலிக்கயிற்றை அணிவதே உத்தமம். அடுத்து வருபவளோ, ‘சௌபாக்யலக்ஷ்மி’ என்று நீ அறிவாயாக.

போகர்: ”எப்பொழுது குருவே, சௌபாக்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்?”

அகத்தியர்: ‘சொல்கிறேன் கேள், பெண்கள் தங்கள் புருவங்களைச் சிரைக்கக்கூடாது. சிரைத்தால், கணவனுடைய ஆயுள் நிச்சயம் குறையும். அடுத்து, பெண்கள் ஒட்டுப்பொட்டு வைக்கக்கூடாது. மேலும், மஞ்சளால் செய்த குங்குமத்தைத்தான் நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மேற்கூறியபடி முகத்தைப் பேணாதவர்களை விட்டு சௌபாக்யலக்ஷ்மி அகன்று விடுகிறாள் என்று உறுதியோடு மக்களுக்கு அறிவிப்பாய் போகா”

போகர்: ”ஐயனே! பெண்கள் புருவத்தைச் சிரைக்கக்கூடாது என்றீர்கள்… ஆண்கள் சிரைத்தால்?

அகத்தியர்: ”ஆண்கள் சிரைத்தால்.தந்தைக்கு பிண்டம் போடும் நிலையில் தடங்கல் ஏற்படும். இதனால் சாபம் உண்டு என்று நீ அறிதல் வேண்டும். இவையெல்லாவற்றிற்கும் காரணம் அறியாமையும், அறிந்த பெரியவர்களை நாடாமையுமே

போகர்: ”ஜயனே. இதைத்தான் ‘தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்’ என்றார்களோ பெரியவர்கள்

அகத்தியர்: ”ஆம், ஐயனே! தவறுகளைத் தாராளமாகச் செய்து நம்முள் இருக்கும் லட்சுமிகளை நாமே விரட்டியடித்தபின் நம்மிடம் செல்வங்கள் எப்படிச் சேரும்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − three =

Most Popular