Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalசித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம் - பகுதி-1!

சித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம் – பகுதி-1!

சித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம் – பகுதி-1!

அகத்தியர், போகர் உரையாடல்
சித்தர்கள்

அகத்தியர்: ”நம் ஒவ்வொருவர் உடலிலும் அஷ்டலக்ஷ்மிகள் வசிக்கும் போது, நாம் எப்படி ஏழைகளாவோம்?

போகர்: ”நம் உடலில் அஷ்ட லஷ்மிகள் வசிக்கிறார்களா? மக்கள் அறிய ஆவலாக இருக்கிறார்கள் குருவே!

அகத்தியர்: ”மனிதனுடைய உடலில் வசிக்கும் அஷ்டலக்ஷ்மிகள் மகிமையைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக. முதலாவதாக, நம் பாதங்களில் வசிப்பவள் “ஆதிலக்ஷ்மி” என்று நீ அறிவாயாக

போகர்: “அதனால்தானா குருவே, கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருக்கும்போது கால்கட்டை விரலைச்சூப்பினான்?

அகத்தியர்: “சரியாகச் சொன்னாய் போகா… கிருஷ்ண பரமாத்மா ஒன்றைச் செய்கிறான் என்றால் சும்மாவா? அப்படி அவன் கால்கட்டை விரலைச் சூப்புவதன் மூலம் ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறானாம், ஐயனே.

போகர்: ”ஐயனே! ஆதிலட்சுமி ஒருவனை விட்டு எப்பொழுது விலகுகிறாள்?

அகத்தியர்: ”பிறர் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நம் கால் படும்போதும், மது, மங்கை, சூதாட்டம்…இவைகளை நாம் நாடும்போதும் ஆதிலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள். ”பிறர் மீது தெரியாமல் கால் பட்டு விட்டால் சிவ சிவ எனக்கூற இலக்குமி விலகமாட்டாள்.

போகர்: ”ஜயனே, கலியுகத்தில் திருமணங்கள் நடக்கும் இடங்களில் கூட சூதாட்டம் மலிந்து விட்டதே!

அகத்தியர்: “ஜயனே, இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான்… திருமணம் நடக்கும் இடங்களில் சூதாடுவதால் மனமக்களுக்கு ‘தீய’ புத்தியோடு கூடிய மக்கள் பிறக்கின்றன. ஆகவே திருமண வைபவங்களில், இரு வீட்டாரும் ஒன்று கூடி, சூதாடுவதைத் தடுத்து நிறுத்த வேணடும்

போகர்: ‘சத்குருநாதா, மனிதன் ஆதிலக்ஷ்மியின் ஆசி பெற என்ன செய்ய வேண்டும்?

அகத்தியர்: “நம் தாய் தந்தையர்க்கும், குருவுக்கும், பெரியோர்களுக்கும் பாத பூஜை செய்து வணங்குவதன் மூலம், நாம் ஆதிலக்ஷ்மியின் அருளைப் பெறலாம். அடுத்து, காலை நீட்டியபடி புத்தகத்தை வைத்துக்கொணடு படிப்பதாலும், நெல், அரிசி, தானியம் இவைகளைக் கால்களால் மிதிப்பதாலும் பால் கறக்கும்போது, பசுவினுடைய கால்களைக் கட்டிவிட்டுக் கறப்பதாலும் நம்மை விட்டு முக்கியமான ஒரு லட்சுமி விலகுகிறாள். அவள்தான் “கஜலக்ஷ்மி” ….மனிதனுடைய முழங்கால் பகுதியில் அவள் வசிக்கிறாள்”

போகர்: ”ஜயனே, கஜலக்ஷ்மி நம்மிடமிருந்து விலகாமலிருக்க என்ன வழி?

அகத்தியர்: ”நான் முதலில் சொன்ன தவறுகளை செய்யாமலிருப்பதாலும், கணவன், குரு, பெரியவர்கள் ஆகியோருடைய முழங்கால்களை, வலி தீர பிடித்து விடுவதாலும் கஜலக்ஷ்மி நம்மை நாடி வருகிறாள்….அடுத்து வருபவள் வீர்யலக்ஷ்மி

போகர்: ”குருவே, வீர்யலக்ஷ்மி நம் உடலில் எங்கு வசிக்கிறாள்?

அகத்தியர்: ”ஜயனே, மனிதனுடைய இடுப்புக்குக் கீழ் பகுதியில் அவள் வசிக்கிறாள். குடுமி வைத்தவர்களை என்றுமே கேலி செய்யக்கூடாது. அப்படிச் செய்வதால் மனிதன் ‘கானப்புரட்டி’ என்ற சாபத்திற்கு ஆளாகிறான். அச்சாபத்தின் மூலம் ஒருவன் எவ்வளவு முயன்று படித்தாலும், அவன் மண்டையில் படிப்பு ஏறாது… குடுமியைக் கேலி செய்வதாலும், சாதுக்களையும் மகான்களையும் கேலி செய்வதாலும், வீர்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்.

போகர்: ”குடுமியில் அப்படி என்ன விசேடம்?

அகத்தியர்: ”சீடனே, குடுமி மகிமையைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், அதற்கு முடிவே கிடையாது.. ஆகவே, ‘குடுமி மகிமை’யைப் பற்றிப் பிறகு பேசுவோம். ஆனால் ஒன்றை மட்டும் நீ தெரிந்து கொள்ள வேண்டுமடா… குடுமி வைத்துள்ள ஒருவன், சாதாரண மனிதனைவிட 100 மடங்கு அதிகமாக, சீலத்தையும், குணத்தையும், நாணயத்தையும் பெற்றிருக்கிறான்.” அவன் தவறு செய்தால் பரிகாரம் கிடையாது. சாபம் உண்டு: ”ஜயனே, அடுத்து வருபவள் ”விஜயலக்ஷ்மி அல்லவா?

அகத்தியர்: ”ஆம், ஐயனே! இவள் நம்முடைய இடது தொடையில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக. இடது தொடை எப்பொழுதும் மனைவிக்குதான் சொந்தம். ஆகவே மனைவியை விடுத்து, பிறன்மனை நோக்கினால் நம்மைவிட்டு விஜயலக்ஷ்மி அகன்று விடுகிறாள்.”துரியோதனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றதால்தான் அவன் தோல்வியுற்றான்” என்கிறது இருடிகள் பாரதம்.

போகர்: ”ஜயனே, துரியோதனனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றது எதனால்?

அகத்தியர்: ”பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டதில் அனைத்துச் செல்வங்களையும் இழந்து, அதோடு மட்டுமல்லாது திரௌபதியையும் பணயமாக வைத்து இழந்து, சபையில் வாயடைத்து நிற்கிறார்கள்… உடன் திரௌபதியும் நிற்கிறாள்… அப்பொழுது, துரியோதனன் திரௌபதியைப் பார்த்து ‘அமருவாய் என் மடியிலே’,என்று சொல்லித் தன் இடது தொடையைக் கையால் தட்டினான். பிறன் மனைவியைத் தன் மடியில் அமரத் தட்டியதால் விஜயலக்ஷ்மி அவனை விட்டுச் சென்று விட்டாள்… துரியோதனனும் போரில் தோற்றான் புரிந்ததா? அடுத்து வருபவள் ‘சந்தானலக்ஷ்மி’ இவள் மனிதனுடைய வலது துடையில் வசிக்கிறாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =

Most Popular