Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalசிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்..?

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்..?

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்.

சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம்.

அப்படியில்லை.

சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர்.

அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே தியானத்தில் இருப்பவர்.

எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை கலைப்பது போன்றது.

எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.

சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை.

சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர்.

எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.

இதுவே முறையாகும்.

தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா………

சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.

சிவனின் அன்புக்குரிய பக்தரான சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்

சண்டிகேஸ்வரர்

நம்மை அனைத்து வித துன்பங்களிலிருந்தும் காப்பவர்களாக காவல் தெய்வங்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் சிவபெருமான் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர். அந்த சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இதோ.

சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே

ஸிவ பக்தாய தீமஹி

தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.ய்வது இறைவன் நாளை நம்மை வீட்டில் இருக்க செய்து விட்டாரே ! !

#சண்டிகேசுவரர்! (#Chandikeswarar)

உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் நாம் #சண்டிகேஸ்வரர் சன்னதியை பார்க்கலாம். இது நமக்குத் தெரிந்த ஒன்றுதான் ஆனால் யார் இந்த சண்டிகேஸ்வரர் அவருடைய இயற்பெயரே சண்டிகேஸ்வரர் தானா? சில சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை சுற்றிவர முடியாதபடி நெருக்கமாக இருக்கும் ஏன் இவ்வாறு அமைத்திருக்கின்றனர்? இந்தக் கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, உங்களுக்கு விசாரசருமர் பற்றி தெரியுமா? யார் இந்த விசாரசருமர்? அவருக்கும் சண்டீசர்க்கும் என்ன தொடர்பு உண்டு? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிய இக்கதையை முழுவதும் கேளுங்கள்.

முதலில் #விசாரசருமர் பற்றி பார்ப்போம்! விசாரசருமர் என்பவர் திருவாய்பாடியில் உள்ள #சேய்ஞலூர் எனும் ஊரில் அந்தணரான எச்சத்தன் – பவித்திரை என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு ஏழாம் வயதிலேயே உபநயனம் வழங்கப்பட்டது. சிவனையே முழுமுதற் கடவுளாக விசாரசருமர் வணங்கி வந்தார்.

அவரின் சிறுவயதில், ஒருவர் மாடு மேய்க்கும் போது பசுக்களை கொம்பால் அடித்தார், இதைப்பார்த்த விசாரசருமருக்கு கோபம் வர அதைத் தடுத்து, பசுக்களை மேய்க்கும் பொறுப்பை தானே ஏற்றார். சிறப்பாக மேய்க்கும் வல்லமையும் பெற்றார். இதனால் பசுக்கள் பாலை அதிகம் தந்தன. அந்த பாலில் மணலில் செய்து வைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார்.

ஓர் நாள் இதை அறிந்த பசுக்களின் சொந்தக்காரர் விசாரசருமரின் தந்தையான எச்சத்தனிடம் முறையிட்டனர். உடனே நான் அவனை கண்டிப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் விசாரசரமர் இருக்கும் இடத்தை அறிந்து விரைந்து சென்றார். அங்கு அவர்கள் சொன்னதுபோல் விசாரசருமர் மணலில் செய்த லிங்கத்திற்கு #அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த எச்சத்தன் கோபத்தில் அந்த பாலையும் #பூஜை பொருள்களையும் தட்டி விட்டார். இதை கண்ட விசாரசர்மர் கோபத்தில் கீழேயுள்ள துரும்பை கையால் பிடித்து அவரின் தந்தை என்றும் பாராமல் எடுத்து எரித்தார். அந்த துரும்பானது சிவனின் கடஷ்த்தால் மழுவாக மாரி எச்சத்தன் காலை வெட்டியது.

அதனை கண்டுகொள்ளாமல் விசாரசர்மர் சிவபூஜை செய்யத் தொடங்கினார். அவரின் செயலால் #சிவபெருமான் உமையோடு தோன்றினார். விசாரசர்மர் அவர்களை வணங்கினார்.

விசாரசர்மரை தன்னுடைய கணங்களின் தலைவராக்கினார். அத்துடன் #சண்டீசன் எனும் பதவியான சிவபெருமானின் ஆடைக்கும், பூசை பொருட்களுக்கும் உரியவரானாக நியமித்தார். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்று அவர் தான்சூடியிருந்த #கொன்றை #மலர்மாலை யை விசாரசருமருக்கு சூட்டினார்.

எச்சத்தனும் உயிர்ப்பெற்று சிவபெருமானை அடைந்தார்.

சண்டிகேஸ்வரர்

தெரிந்து கொள்ளுங்கள்-001

சண்டிகேஸ்வரர்

சைவ சமய பஞ்ச மூர்த்திகளில் சண்டிகேஸ்வரரும் ஒருவர். வழக்கமாக சிவன் கோவில்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் இடத்திற்கு இடது புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களில் பஞ்ச மூர்த்தி உலாவின் புறப்பாடின் பொழுது சண்டிகேஸ்வரரும் இறுதியாக உலா வருவார். சண்டிகேஸ்வரர் என்பது சிவபெருமான் அளிக்கும் ஒரு பதவியின் பெயர்.

இந்த பதவி வகிப்பவரின் பொறுப்புகள் இதோ உங்களுக்காக.

சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் எல்லாம் சண்டிகேஸ்வரர் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதனாலேயே சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு முன்பு நின்று இரண்டு கைகளையும் தட்டி காண்பித்து விட்டு நான் இந்த கோவிலின் சொத்துக்கள் துரும்பு உட்பட எதையும் எடுத்து செல்லவில்லை என்று சொல்லி விட்டு கோவிலை விட்டு வெளியே வருகிறோம்.சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவர் சன்னதிக்கு முன்பு நின்று கை தட்டுவது கூடாது கை தட்டினால் தியானம் கலைந்து விடும் என்பார்கள்.

பொதுவாகவே பலரும் சொல்லும் காரணம். சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது கண் தெரியாது அதனால் கை தட்டுகிறோம் என்பார்கள். இதெல்லாம் கற்பனை காரணங்கள். உண்மையான காரணம் நான் எதையும் கோவிலில் இருந்து எடுத்து செல்லவில்லை என்பதை காட்டவே கையை தட்டுகிறோம். இதை உங்கள் குழந்தைகளுக்கும் பேர குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.

ஒவ்வொரு யுகத்திலும் ஒருவருக்கு சண்டிகேஸ்வரர் பதவியை சிவ பெருமான் அளித்துள்ளார்.

க்ரித யுகத்தில் பிரம்மாவிற்கு இந்த பதவி கிடைத்தது – இவருக்கு பெயர் நான்முக சண்டிகேஸ்வரர்.

தேரேதாயுக சண்டிகேஸ்வரர் – மூன்று முக சண்டிகேஸ்வரர்.

துவாபர யுக சண்டிகேஸ்வரர் -இரண்டு முக சண்டிகேஸ்வரர்.

கலி யுக சண்டிகேஸ்வரர் – ஒரு முக சண்டிகேஸ்வரர்

தர்மத்திற்கு தலைவனான எம தர்மருக்கு கூட சண்டிகேஸ்வரர் பதவி தரப்பட்டுள்ளது.திருவாரூர் திருவாஞ்சியம் ஸ்தலங்களில் உள்ள சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றனர்.

சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும் ஆன்ம பலமும் ஆன்மீக பலமும் சிவ பெருமானை தரிசித்த பலனும் கிடைக்கும்.பொதுவாக சண்டிகேஸ்வரர் தன்னுடைய ஆயுதமான மழுவுடன் காட்சி தருவார். மழு என்பது சிவ பெருமானின் ஆயுதமாகும்.

உங்கள் கவனத்திற்கு:

சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவரை வலம் வருவது கூடாது.

அவர் சிவாலய கணக்கராக இருப்பதால் கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது இவரிடம் நான் எதையும் கோவிலில் இருந்து எடுத்து செல்லவில்லை என்பதை கைகளை காண்பித்து சொல்லிவிட்டு வரவேண்டும்.

ஆடையை இவருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருப்பதால் ஆடையிலிருந்து நூல் இழைகளை அறுத்து போடுவது தவறு அப்படி செய்யாதீர்கள்

சிவ பெருமானை வணங்கும் பொழுது சண்டிகேஸ்வரரையும் சேர்த்து வணங்கினால் தான் முழு பலன் கிடைக்கும்.

ஆகமங்களின் படி இவருக்கு வாகனம் காளை.

நான்கு கரங்களை கொண்டவர். சூலம் உளி அபய வரத முத்திரையுடன் இருப்பார்.

பெரும்பாலான கோவில்களில் சிவபெருமானை வழிபட்டுவிட்டு பிரகாரம் சுற்றி வரும்பொழுது துர்கை அம்மன் சன்னைதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும்.

இந்த சண்டிகேஸ்வரர் புராணத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள். இது போன்ற அறிய தகவல்களுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 6 =

Most Popular