Friday, October 27, 2023
HomeAanmeega Thagavalgalமாசி மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா?

மாசி மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா?

மாசி மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா?

தமிழ் மாதங்களில் வழிப்பாட்டுக்கு உகந்த மாதமாக மாசி மாதமும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் 30 நாட்களும் விஷேசமான நாட்கள்தான். இந்த மாசி மாதத்தில், புதிய கலைகளையும் கல்விகளையும் கற்கத் தொடங்கலாம்.

மாசி மாதத்தின் சிறப்புகள்:
1.இந்த மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வேண்டுவோருக்கும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டுவோருக்கும் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபட அருளுவார் அந்த வினைத் தீர்க்கும் விநாயகர் என்று கூறுகின்றனர்.

2.பார்வதிதேவி காளிந்தி நதியில் தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் மாசி மாதத்தன்று தோன்றியதாக புராணம் சொல்கிறது.

3.மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம் என்று பக்தர்கள் போற்றுகிறார்கள். சிவனின் பெரும்பாலான திருவிளையாடல் மாசி மாதத்தில் அரங்கேறி உள்ளன.

4.மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவதும் உபநயனம் செய்வதும் சிறந்தது என கூறப்படுகிறது.மாசி மாதத்திலும் மற்ற அனைத்து மாதங்களிலும் எல்லா நாளிலும் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். மும்மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள் பெரியோர்.

5.மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் சுவாமி மைலயில் தனது தந்தைக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்தார்.
6.இரண்டு ஏகாதசிகள் வரும் மாசி மாதத்தில் விரதம் இருப்பது மகாபுண்ணியம் என்றும் சகல தோஷங்களையும் போக்கும் என்றும் பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

7.மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார்.

8.மக நட்சத்திரத்தில் சிம்ம ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கும்பகோணத்தில் மாசி மகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

9.இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது புதிய கலைகளையும், கல்விகளையும் கற்கத் தொடங்குகிற மாதம். மாசி மாதத்தின் முப்பது நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது மாசி மாதம்.

10.திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம்.

11.அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். எனவே, மாசி மாதத்திலும் மற்ற அனைத்து மாதங்களிலும் எல்லா நாளிலும் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். மும்மடங்கு பலன்களைத் தரும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்கிறோம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

12.உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம். மாசி மாதத்தில் தெய்வ வழிபாடுகளிலும் பூஜைகளிலும் ஆத்மார்த்தமாக ஈடுபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.

13.ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். எனவே, மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். அது மும்மடங்கு பலன்களைத் தரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − ten =

Most Popular