ஸ்ரீ நரசிம்மரின் அற்புத ஸ்தலங்களின் தொகுப்பு!

59

ஸ்ரீ நரசிம்மரின் அற்புத ஸ்தலங்களின் தொகுப்பு!

மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிய தசாவதாரங்களில் நரசிம்மர் மட்டுமே யோக நிலையில் காட்சி தருகிறார். இதுவே நரசகம்மரின் சிறப்பம்சமாகும். இன்று நாம் இத்தொகுப்பில் காண இருப்பது நரசிம்மர் அருள்புரியும் சில சிறப்புமிக்க ஸ்தலங்கள் என்னவென்று காண்போம்.

  1. விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள சிங்ககிரி கோவிலில் உக்கிர நரசிம்மர் மூலவராக காட்சியளிக்கிறார்.
  2. கோவை மாவட்டம் தாளக்கரையில் உள்ள கோயிலில், நரசிம்மர் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்ம பீடத்தில் சக்கரமும், அர்த்தமண்டபத்தில் சாலகிராமமும் உள்ளன. முதலில் இந்த சாளக்கிராமம் தான் நரசிம்மராக பூஜிக்கப்பட்டு வந்தது. எனவே இதை ஆதி நரசிம்மர் என்றும் அழைக்கின்றார்கள். இங்கு பிரசாதமாக தரப்படும் துளசி மற்றும் எலுமிச்சையை வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கினால் செல்வம் பெருகும்.
  3. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் எட்டடி உயரத்தில் அமர்ந்த நிலையில் மகாலட்சுமியை தொடையில் அமர வைத்துக் கொண்டு இடது கரத்தில் தேவியை அணைத்தபடி காட்சி தருகிறார். வலது பெரும் அபய முத்திரையுடன் உள்ளது. திருச்சியில் காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் ஆகிய மூவரையும் தரிக்கலாம்.
  4. செங்கல்பட்டு அருகில் உள்ள பல்லவர் கால சிங்கப்பெருமாள் கோவிலில் மூலவர் நரசிம்மமூர்த்தி விலை மதிப்புள்ள கற்களால் வடிக்கப்பட்டவர் என்பதால் வஸ்திர கவசம் சாத்தப்பட்டுள்ளது. உற்சவர் திருநாமம் பிரகலாத வரதன். தாயாரின் பெயர் அகோபிலவல்லி. இங்கு நரசிம்மர் மூன்று கண்களுடன் காணப்படுகிறார்.
  5. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் ரங்கநாதர் கோயிலில் அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கல சிலை உள்ளது. இவரது ஒரு கை பிரகலாதனின் தலையை தொட்டவாறும், மற்றொரு கை அபய ஹஸ்தத்துடனும், மற்ற கரங்கள் இரண்யனை வதம் செய்வது போலவும் உள்ளன .
  6. ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் கருட பகவான் நரசிம்ம அவதாரத்தை தரிசிப்பதற்காக தவம் இருந்ததால் அவரது விருப்பத்தை பூர்த்தி செய்தார் பெருமாள். வருடம் தவம் செய்ததால் இம்மலைக்கு கருடாசலம் என்ற பெயர். இங்கே சித்ரா பௌர்ணமி அன்று நூற்றி ஒரு வகை படையல்கள், பொங்கல் படைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.