Monday, October 16, 2023
HomeAanmeega Thagavalgalஸ்ரீ சுதர்சன ஜெயந்தி வழிபாடு!

ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி வழிபாடு!

தீய சக்திகள் அண்டாமல் இருக்க செய்யும் ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி வழிபாடு

பெருமாளுக்கு சேவை செய்யும் சுதர்சன்:

பெருமாள் உடலில் இருக்கும் பஞ்ச ஆயுதங்களில் வலது கரத்தில் இருக்கக்கூடிய சக்கரத்தின் பெயர் தான் சுதர்சனன். சக்கரத்தாழ்வார், சக்கர ராஜன் என பல பெயர்கள் சுதர்சன சக்கரத்திற்கு உண்டு. எப்போதுமே பெருமாளோடு இருந்து கொண்டு அவருக்கு சேவை செய்வதற்காகவே இருப்பவர் சுதர்சனன்.

சுதர்சனன் என்பதற்கு நல்வழி காட்டுதல் என்பது பொருளாகும். அதர்மத்தை அளித்து தர்மத்தை காக்க கூடியவர் தான் இந்த சுதர்சனன். மனதை கட்டுப்படுத்தி நம்மை நல்வழியில் இயக்கிச் செல்பவர் இந்த சுதர்சனன். சிவ ஆலயங்களில் எப்படி பைரவர் வழிபாடு சிறப்பாக செய்யப்படுகிறதோ அதேபோல விஷ்ணு ஆலயங்களில் சக்கரத்தாழ்வார் வழிபாடு சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

வீரத்துக்கு உரியவர் சக்கரத்தாழ்வார் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எதிரிரை வீழ்த்துவதற்காக சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி இருப்பார். மகாவிஷ்ணுவை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதே சிறப்பு சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு கிடைக்கும்.

சக்கரத்தாழ்வார் வழிபாடு:

விஷ்ணு கோயில்களில் சக்கரத்தாழ்வார் மற்றும் நரசிம்மரை முண்ணும் பின்னுமாக வைத்து வழிபாடு செய்வார்கள். நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை வேண்டிய உடனே வேண்டிய இடத்தில் நம்மை ஆபத்திலிருந்து காக்கும் கடவுள் நரசிம்மர் அதேபோல சக்கரத்தாழ்வாரும் நாம் வேண்டியவுடன் நமக்கு அருள் தருபவர். ஆதனால் இவர்களை ஒன்றாக வணங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதற்காக சக்கரத்தாழ்வாறையும் நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து வழிபடும் பழக்கம் உருவாகியது.

ஸ்ரீ சுதர்சன காயத்ரி:

ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

பகவான் விஷ்ணு கையில் அமைந்திருக்கும் சக்கரத்தை ஏதேனும் நினைத்து தியானம் செய்து வருவதால், பகவான் நம்மை காத்து அருள் புரிவார். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்வில் ஆயுளும், அமைதியும் மற்றும் வாழ்வில் பல இலக்குகளை அடைய இது பெரிதும் உதவியாக இருக்கும்.

சக்கரத்தாழ்வார் வழிபாட்டு பலன்கள்:

கடன் தொல்லை நீங்க சக்கரத்தாழ்வார் வழிபாடு சிறப்பானதாகும். சுதர்சனாரை வழிபடுபவர்களுக்கு எந்த விதமான மந்திர சக்தியாலும் தந்திர சக்தியினாலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் சுதர்சன வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது. எந்தவிதமான தோஷங்கள் இருந்தாலும் நிவர்த்தி செய்யக் கூடியவர் சுதர்சனார்.
தமிழகத்தில் உள்ள விஷ்ணு ஆலயங்களான ஸ்ரீரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற அனைத்து ஸ்தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய நாள் இந்த சுதர்சன ஜெயந்தி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

Most Popular