Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

மந்திரம் சொல்லும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை

நீதி – நன் நடத்தை
உபநீதி – தன்னலமற்ற உதவி

உலகத்தில் அநேகமக்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், தன் கஷ்டங்களுக்கு முடிவே இல்லை என்பதுதான்; கடவுள் தன்னிடம் கருணை காண்பிப்பதில்லை எனக் குறைக் கூறி வருகிறார்கள்.

ராமாயணத்திலிருந்து இந்த சிறுக் குறிப்பைப் படித்து அவர்கள் தெளிவு பெறுவார்களாக.

ஹனுமானும் விபீஷணனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். ஒரு நாள் விபீஷணன் ஹனுமானைப் பார்த்து, “ஹனுமானே, நீ பிறப்பில் குரங்காக இருந்தாலும், ராம நாமத்தை இடைவிடாது கூறி , ஸ்ரீ ராமனின் கருணையும் கிருபையும் உனக்கு அதிகமாகக் கிடைத்திருக்கிறது. நீ எத்தகைய பேறு பெற்றவன்.

நானும் தான் ஸ்ரீ ராமனின் நாமத்தை இடைவிடாது கூறி வருகிறேன், இருந்தாலும் ஸ்ரீ ராமனின் அருளைப் பெறும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லையே” எனக் கூறினான்.

ஹனுமான் இதன் காரணத்தை விளக்கிக் கூறினான். ராம நாம ஸ்மரணம் செய்வது சரியே. ஆனால் ஸ்ரீராமனின் காரியங்கள் ஏதாவதில் பங்கெடுத்துக் கொண்டீர்களா? ஒரு நாளாவதுஅவரைப் பார்க்கச் சென்று அவர் படும் துன்பத்தைக் குறைக்க முயற்சி செய்தீர்களா? உங்கள் அண்ணன் ராவணனால் சிறைப்பட்ட சீதாதேவி இலங்கையில் இருந்தார்.

அவரைச் சென்று ஒரு முறையாவது தரிசித்தீர்களா? வெறும் நாம ஸ்மரனைச் செய்து, சேவை எதுவும் செய்யாமல், ஸ்ரீ ராமனின் அருளை எங்ஙனம் பெற முடியும்? எனக் கேட்டார்.

நீதி:
நம் பக்தியை வெளிப்படுத்த வெறும் பிரார்த்தனை மட்டுமே போதாது. அத்துடன் கடவுள் அல்லது குருவின் உபதேசங்களை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.

இதற்கு ஒரு மார்க்கம் என்னவென்றால் தேவை இருப்பவர்களிடம் அன்பு செலுத்தி உதவி செய்ய வேண்டும். இதயத்தில் கடவுளை நினைத்து, கைகளால் செயல் படுத்த வேண்டும். அதுதான் கடவுளை அணுகும் முறை.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =

Most Popular