துன்பங்களைப் போக்கும் ஹரி நாமம்

344

.பவ மஹா தாவாக்கனி நிர்வாப்பணம்… இதயத்தின் களங்கங்கள் எல்லாம் நீங்கியபின் உலக வாழ்வின் பிரச்சனைகளையெல்லாம் உடனடியாக தீர்ந்து விடுகின்றன .இந்த உலகம் தாவாக்னி அதாவது காட்டில் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்வில் யாரும் துன்பத்தை விரும்புவது இல்லை .ஆனால் அது வந்தே தீரும் . இதுவே உலக இயற்கையின் நியதி. யாரும் நெருப்பை விரும்புவதில்லை ஆனால் நகரத்தில் தீயணைக்கும் படை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது .எப்போதும் எங்கேயாவது தீப்பற்றிக் கொள்கிறது. அதை போல எவரும் விரும்பாத பல விஷயங்கள் உள்ளன .யாரும் மரணத்தை விரும்புவது இல்லை. ஆனால் மரணம் ஏற்படுகிறது. யாருமே விரும்புவதில்லை ஆனால் நோய் வருகிறது. யாருமே விரும்புவதில்லை ஆனால் முதுமை வருகிறது .அவை எல்லாம் நாம் விரும்பாவிட்டாலும் வந்திருக்கிறது…

நமது உடல் புலன் இன்பத்தை பெற கடினமாக உழைப்பதற்காக ஏற்பட்ட இல்லை என்று பாகவதம் கூறுகிறது. மிக கடினமாக உழைத்து புலனுகர்சியினால் திருப்தி அடைதல் பன்றிகளின் செயல்.. .மனிதனாக பிறந்தவன் தவத்தை மேற் கொள்ள வேண்டும் .பல முனிவர்களும் அரசர்களும் அமைச்சர்களும் சந்நியாசிகளும் அறியாமையில் மேலும் ஆழ்ந்து விடாமல் இருக்க வாழ்க்கை முழுவதும் தவத்தை மேற் கொண்டுள்ளனர் .இந்தியா ஒரு தவ பூமி என்பதே மறந்து தற்போது அதை தொழிநுட்ப நாடாக ஆக்கி வருகிறோம்…

இந்தக் கலியுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்து அவற்றை புகழ்ந்துரைப்பதை தவிர இதர தர்மம் எதுவும் கிடையாது.. இதுவே அனைத்து சாஸ்திரங்களின் கருத்தாகும் இதை தவிர வேறு கதி இல்லை .வேறு கதி இல்லை. வேறு கதி இல்லை.
இந்த ஸ்லோகம்

…கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா …

இதனை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் .இது நடைமுறைக்கு சாத்தியமானது .அங்கீகரிக்கப்பட்டது. மேலும் எளிமையான இந்த உச்சாடனத்தின் மூலம் எவரொருவரும் முன்னேற்றம் அடைகிறார்கள் என்பது அவரை சோதித்து உணரமுடியும். வேத கொள்கையாலும் சைதன்ய மகாபிரபு போன்ற ஆச்சாரியர்களும் அங்கீகரிக்கப்பட்டது. வழிமுறை மிகவும் எளிமையானது. எந்த இழப்பும் இல்லாதது ..இதற்கு யாரும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பகவான் நாமத்தை மிக எளிதாக உச்சாடனம் செய்யலாம்.. இது நாமம் மிக சக்தி வாய்ந்தது…

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண பிரபுபாத் கீ ஜெய்