செல்வாக்கு, புகழ் உண்டாகும், வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்!
ஜனவரி 11 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (11-01-2023) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…
மேஷம்: நினைக்கும் காரியங்கள் வெற்றியாகும். தொழில் முயற்சி வெற்றி பெறும். உழைப்பு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் அற்புதமான நாள்.
ரிஷபம்: செல்வ வளம் உண்டாகும். ஆண்டாளை வழிபட வேண்டும். திருமணத் தடை விலகும். தன லாபம் உண்டு. பிஸினஸ் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்: கல்வி முன்னேற்றம் உண்டாகும். ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனைவியிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும்.
கடகம்: இனிமையான நாள். குடும்பத்தில் சலசலப்புகள் இருக்கும். வாகன தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வளர்ப்பு பிராணிகளின் உடல் நலனில் பிரச்சனைகள் வரலாம்.
சிம்மம்: மகிழ்ச்சிக்குரிய நாள். வரவுகளும், செலவுகளும் இருக்கும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். பிள்ளைகளால் மன உளைச்சல் இருக்கும். சர்க்கரை வியாதி இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி: மாற்றங்களை தரக் கூடிய நாள். வெளிநாட்டு பயணங்கள் அமையும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையும். புதிதாக வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்: அதிர்ஷ்டகரமான நாள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் அனுகூலமான சூழல் உண்டு. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
விருச்சிகம்: கல்யாண விஷயங்கள் குறித்து செய்தி தேடி வரும். பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக அமையும். வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தனுசு: நல்ல செல்வாக்கு உண்டாகும். புகழ் உண்டாகும். வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும்.
மகரம்: திருமண பொருத்தம் பார்ப்பதில் எச்சரிக்கை தேவை. திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்கு குங்குலியம் வாங்கி கொடுக்க, நோய், நொடிகள் நீங்கும். பிஸினஸ் முயற்சி நன்றாக இருக்கும்.
கும்பம்: அனுகூலமான நாள். மகிழ்ச்சியான நாள். அற்புதமான நாள். குடும்பத்தில் சந்தோஷமான அனுபவங்கள் உண்டு. வாழ்க்கைத் துணைவரால் நிம்மதி உண்டு. வெளிநாட்டு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
மீனம்: மிக நல்ல நாளாக இந்த நாள் அமையும். திருமண யோகம் கூடி வரும். பெண்களால் தொந்தரவு வரலாம். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
