Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalவைகாசி விசாகத்தின் அரிய ஆன்மீக தகவல்கள்

வைகாசி விசாகத்தின் அரிய ஆன்மீக தகவல்கள்

வைகாசி விசாகத்தின் அரிய ஆன்மீக தகவல்கள்

வைகாசி விசாகம் – தொன்றுதொட்டு தமிழர்களால் கொண்டப்படும் ஒரு புனித நாள் . இந்த நன்னாளில் நமது தமிழ் கடவுள் முருக பெருமான் அவதரித்தாக கூறுவார்கள் . இந்த நாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு முருகனின் பூரண அருள் பெற்று நோய் நொடி இல்லாமல் சகல செல்வங்களையும் பெற்று சுபீக்ஷமாக இருப்பார்கள் . இந்த விரதம் இருபவர்களுக்கு பகைவர்களால் துன்பம் ஏற்படுவது இல்லை என்று நம்பப்படுகிறது . ஆறு படை வீடுகளில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படும் , தற்போது லாக்கடவுன் என்பதால் திருவிழாக்கள் ரத்து செய்பட்டு உள்ளன. இதே நன் நாளில் தான் ஏம தர்ம மகா ராஜா அவதரித்தார்கள்.

சூரபதமனின் தொல்லை தாங்க முடியாத தேவர்கள் , சிவ பெருமானிடம் முறையிட்டனர் . அவர் தனது நெற்றி கண்ணில் இருந்து 6 தீ பொறிகளை வெளியிட்டார் . கங்கை அந்த 6 தீ பொறிகளை சரவண பொய்கையில் சேர்த்தது . அந்த 6 தீ பொறிகள் 6 குழந்தைகளாக மாறிய தினமே வைகாசி விசாகம் . அந்த குழந்தைகளை மகா விஷ்ணு கார்த்திகை பெண்களை கொண்டு வளர்க்க வைத்தார் . இந்த வருடம் வைகாசி விசாகம் சந்திரன் விசாக நக்ஷத்திரத்தில் பிரவேசிக்கும் நாட்கள் மற்றும் நேரம் – மே 25 , காலை 7.04 முதல் 26 மே அதிகாலை 4.11 வரை .

வருடத்தை ஆறாக தட்பவெப்ப நிலையை பொறுத்து பிரித்த நம் முன்னோர்கள் – சித்திரை மற்றும் வைகாசியை இளவேனில் காலமாக கூறுவார்கள் . இந்த மாதம் ரிஷப ராசியை குறிக்கும் . வைகாசியை விசாகம் என்று வட மொழியில் குறிப்பது உண்டு , விசாகம் என்றால் மலர்ச்சி என்று மற்று ஒரு பொருள் உள்ளது . முருக பெருமானுக்கு சிறப்பாக தை பூசம் , பங்குனி உத்திரம் , திரு கார்த்திக்கை குறிப்பிட பட்டாலும் , இந்த தினங்களில் சிவ பெருமானுக்கும் விசேஷம் உள்ளது நாம் அறிந்ததே . வைகாசி விசாகம் மட்டுமே முருக பெருமானுக்கு முழுவதும் உரித்ததே .

வைகாசி விசாகம் மேலும் பல சிறப்புகளை கொண்டு உள்ளது . மகாபாரத்தில் அர்ஜுனன் சிவ பெருமானை நோக்கி தவம் இருந்து பாசு பதாஸ்திரம் பெற்றது இந்த விசாகத்தில் தான் , திருமழபாடி எனும் ஊரில் எம் பெருமான் ஈசன் மழு எனும் ஆயுதம் ஏந்தி திருநடனம் புரிந்தது இந்த புனித நாளில் தான் , ராஜா ராஜா சோழன் நாடகத்தை போடும் நாடக கலைனர்களுக்கு ஆண்டு தோறும் நெல் மணிகளை ராஜா ராஜன் வழங்குவது வைகாசி விசாகத்தில் தான் என்று கல்வெட்டுகள் கூறுகிறது . இராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையை தோற்றுவித்தது இந்த நாளில் தான் , இதற்கு எல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக சித்தார்த்தர் புத்தராக ஞானம் அடைந்தது இந்த புண்ணிய நாளில் தான் . அனைவர்க்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும் . வாழ்க வளமுடன் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 9 =

Most Popular