Tuesday, November 7, 2023
HomeAanmeega Thagavalgalவரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் ! தேவியர் விரும்பும் தாம்பூல உபசாரம்

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் ! தேவியர் விரும்பும் தாம்பூல உபசாரம்

தாம்பூலம் என்பது வெற்றிலை பாக்கு இவற்றிற்கு வழங்கப்படும் பொதுப்பெயர் ஆகும்.

அம்பாளின் லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
தாம்பூல_பூரித_முகீ என்று வரும்.
( தாம்பூலம் தரித்த சிவந்த வாயை உடையவள் )

மேலும் பகவானுக்கு செய்யும்
பூஜையில் கூட
கீழ்க்கண்ட மந்திரத்தில் நிவேதன மந்திரமாக தாம்பூலம் அங்கம் வகிக்கிறது.

நிவேதன_மந்திரம் :

பூகீ பல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுக்தம்
கற்பூர ஸூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம் கற்பூர தாம்பூலம் நிவேதயாமி

என்று கூறி அந்த தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் தெளித்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வார்கள்.

வெற்றிலையில் முப்பெரும் ( துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ) தேவியர்களும் வசிப்பதால் நம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அவசியம் தாம்பூலம் தருதல் வேண்டும்.
குறைந்த பட்சம் குங்குமமாவது தரவேண்டும்.

வெற்றிலை #சத்தியத்தின் சொருபமாக விளங்குவதால்தான் நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.
அப்படி நிச்சயம் ( உறுதி ) செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது வாக்குத் தவறிய கொடும்பாவத்தை தேடித் தரும்.

எல்லா தெய்வங்களின் பூஜையிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு.
பகவானுக்கு நிவேதனம் செய்யும் போது தாம்பூலம் ( வெற்றிலை பாக்கு ) அவசியம்.
மேலும் அம்பிகையை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று #தாம்பூலம் ஆகும்.

தாம்பூலம் ஆனது கீழ்க்கண்ட மங்களப் பொருள்களை உள்ளடக்கியது ஆகும். அவையாவன:

வெற்றிலை ; பாக்கு ; மஞ்சள் ; குங்குமம் ; சீப்பு ; முகம் பார்க்கும் கண்ணாடி ; வளையல்கள் ; திருமாங்கல்ய சரடு ( மஞ்சள்கயிறு ) ; தேங்காய் ; பழம் : பூ ; மருதாணி ; கண் மை ; தக்ஷிணை ; புடவை ; ரவிக்கைத்துணி ; ஸ்லோக புஸ்தகம் ஆகியவை ஆகும்.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவை என்னவென்றால்

1) வெற்றிலை பாக்கு – தாம்பூல மரியாதை

2) மஞ்சள் குங்குமம் – சுமங்கலித் தன்மை

3) திருமாங்கல்ய சரடு – தாலி பாக்கியம்
( மஞ்சள் கயிறு )

4) சீப்பு – கணவனின் ஆயுள் விருத்தி

5) வளையல்கள் – மன அமைதி

6) கண்ணாடி – கணவனின் ஆரோக்யம்

7) தேங்காய் – பாவங்கள் நீங்குதல்
( மட்டைத் தேங்காய் ( உரிக்காதது ) அளிப்பதே சிறந்தது )

8) பழங்கள் – அன்னதான பலன்

9) பூ – மகிழ்ச்சி பெருகுதல்

10) மருதாணி – நோய்நொடி வராமல் இருக்க

11) கண் மை – த்ருஷ்டி தோஷங்கள் விலக

12) புடவை ; ரவிக்கைத் துணி – வஸ்திர தான பலன்

13) ஸ்லோக புஸ்தகம் – வித்யா தான பலன்

இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.

தேவி சரணம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =

Most Popular