வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்!
யாராக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி தான் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதோடு, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தான் கட்டுவார்கள். பெட்ரூம் எங்க இருக்க வேண்டும், பாத்ரூம் எங்க இருக்க வேண்டும், வரவேற்பரை எங்கு வைக்கணும், பூஜை அறை எங்கு வைக்கணும், பணப்பெட்டி எந்த அறையில் வைத்தால் லாபம் வரும் என்றும் ஒவ்வொன்றையும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுவார்கள். ஏனென்றால், நிம்மதியாகவும், சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அல்லவா. அதற்குத் தான் வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவார்கள்.
வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்கு வாஸ்து செடிகள் வளர்க்க வேண்டும். அது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்…
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்:
வாடாமல்லி:
மலர் வகைகளில் வாடாமல் இருக்கும் குணம் கொண்ட பூ எது என்றால் அது வாடாமல்லி தான். வாஸ்து சாஸ்திரப்படி வாடாமல்லி பூவை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
பொன் அரளி:
வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்குவதற்கு மஞ்சள் நிறம் கொண்ட பொன் அரளி செடியினை வளர்த்து வரலாம். மேலும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.
கற்றாழை:
கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வாஸ்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்க வீட்டில் கற்றாழை செடியினை வளர்த்து வரலாம்.
செம்பருத்தி:
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செம்பருத்தி செடியினை வளர்த்து வரலாம். இந்த செடியினை வளர்த்து வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிக்கொண்டை:
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகளில் இந்த கோழிக்கொண்டை செடியும் ஒன்று. வீட்டில் பூஜை செய்யும் போது, சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் மாலைகளுக்கு இந்த கோழிக்கொண்டையிலிருந்து பூக்கும் பூக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செடி வாடாத நிலை கொண்டது.
மணி பிளாண்ட்:
கடன் தொல்லை நீங்கி, செல்வ வளம் அதிகரிக்க வீட்டில் மணி பிளாண்ட் செடியினை வளர்த்து வரலாம்.
மூங்கில்:
வீட்டில் மூங்கில் செடியினை வளர்த்து வந்தால் உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கவும் மூங்கில் செடியினை வீட்டில் வளர்க்கலாம்.
துளசி:
துளசி செடி மகாலஷ்மியின் அம்சமாக விளங்குகிறது. துளசி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
துளசி வாஸ்து செடியாகவும் விளங்குகிறது. அனைவரும் தங்களது வீடுகளில் வளர்க்க வேண்டிய செடி தான் துளசி.
