Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalவீட்டில் விளக்கேற்றுங்கள்

வீட்டில் விளக்கேற்றுங்கள்

விளக்கு ஏற்றிய வீடு வீணாய் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.

வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு, தன்னை சுற்றி உள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது, தானாகவே, ‘பாசிடிவ் எனர்ஜி’ அதிகரிக்கும்.

நம் சுற்றுப்புறம் தெளிவாகவும், பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால், வீடே மயானம் போல் தோன்றும். எல்லாருமே சோர்வாக இருப்பர்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் துாய்மையடைகிறது. அதேபோல், மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்ற, துாய்மை அடைந்து, நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

* சூரிய நாடி, நல்ல சக்தியையும், வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி குளுமையை தருகிறது

* சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது

* நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற, சூரிய நாடி சுறுசுறுப்படைகிறது

* நெய் விளக்கு, சுஷம்னா நாடியை துாண்டிவிட உதவுகிறது

* பொதுவாக நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்; இதற்கு தடையேதும் இல்லை.
ஆனால், பொதுவாக மாலை, 6:30 மணிக்கு ஏற்றுவதே நம் மரபு.
சூரியன் மறைந்ததும், சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது.
ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே, அந்நேரத்தில் விளக்கேற்ற வேண்டும் என்கின்றனர்.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது: அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருந்த ஒரு தாய், மாலையில், மகனும் – மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்த்தார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும், ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவர். மகனை அழைத்து, தாமதமாக வரும் காரணம் கேட்க, ‘உனக்கு இதெல்லாம் புரியாதும்மா… ‘எங்கள் இருவருக்கும் பயங்கர, ‘ஸ்ட்ரெஸ்…’ இருவரும், ‘கவுன்சிலிங்’ போய் வருகிறோம்… ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர், அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும்…’ என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், ‘நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம்; சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்…’ என்று கூறினார்.
அடுத்த நாள் மாலை, வீட்டுக்குள் நுழைந்த மகன் – மருமகள் மூக்கை சுகந்த மணம் துளைத்தது.

இருவரையும் கை கால் கழுவி, உடை மாற்றி, பூஜை அறைக்கு வருமாறு கூறினார், தாய். அவர்களும் அவ்வாறே செய்தனர். மணம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமர்ந்து, இருவரும் தாமாகவே கண் மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவித்தனர். பின், கண் திறந்தபோது, ‘கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல…’ தாயார் மகிழ்ந்தார்.

இன்னொரு விஷயம்…

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களை தினமும் விளக்கேற்றும்படி சொல்ல வேண்டும்.
இப்படி செய்தால், அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும். விளக்கேற்றிய வீடு, வீண் போகாது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − seven =

Most Popular