மனதை சாந்தப்படுத்தும் வழிமுறைகள்!
வாழ்க்கை அமைதியானதுதான். உன் மனம் மட்டும்தான் பதற்றமாக இருக்கிறது.
அதை சாந்தப் படுத்தி வாழ்வில் வெற்றி பெற சில வழிமுறைகள் உள்ளது அதை பின்பற்று. உன் வாழ்வில் வசந்த காலம் உன்னைத் தேடி வரும்.
உனக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் உன்னுடைய திறமைக்கு உட்பட்டவையே. அதை மீறிய பிரச்சினைகளை ஏதும் இல்லை.
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
எதையும் உயர்வாக பார்க்காதீர்கள், தாழ்வாகவும் பார்க்காதீர்கள். யாரையும் ஆராதிக்க வேண்டாம், தூற்றவும் வேண்டாம்.
நோக்கத்தில் தெளிவும் மனதில் அமைதியும் கொண்டு நீங்கள் செயல்படும் போது தான், விரும்பும் லட்சியத்தை அடைய முடியும்.
எப்போது எல்லாம் இறைவன் செயல் என நாம் உணர்கிறோமோ அப்போது நன்மையும், ஆனந்தமும், அமைதியும் நிரம்பி வழியும்!
உறவினர் ஆயினும், கடவுளே ஆயினும் தர்மமே மேலானது. தர்மத்திற்கு எதிராக செயல் படும் அனைவரும் ஒரு நாள் வீழ்ந்து போவார்கள். விதி வலியது, மனித உள்ளத்தின் முன் விதி பின்வாங்கும்..
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
நீ தேடும் ஆனந்தமும் அமைதியும் உன் உள்ளேதான் உள்ளது. அதனை வெளியே தேடாதே. உன் உள்ளே தேடு.
நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள, அறிவு ஒளியை பெற உன் உள்ளத்திலிருந்து வரும் பொறாமை, போட்டி, பேராசை, பயம் போன்ற அழுக்குகளை அகற்றி, உன்னைத் தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.
நீ தனியாக நின்று தான் இதை சாதிக்க வேண்டும். இதில் யாராலும் உனக்கு உதவ முடியாது.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய்.. நல்லதே நடக்கும்..
கணபதி துதி…
வித்தகனே விநாயகனே சரணம்!
வேழமுக நாயகனே சரணம்!
தத்துவமே தமிழ் கடவுளே சரணம்!
தாயகத்தின் முழுமுதலே சரணம்!
சத்தியத்தின் சந்நிதியே சரணம்!
தர்மம் காக்கும் சங்கொலியே சரணம்!
உத்தமனே ஓம் உருவே சரணம்!
உலகம் காக்கும் திருவுருவே சரணம்!
கல்லில் வந்த கற்பகமே சரணம்!
காணும் இன்பம் அற்புதமே சரணம்!
வெள்ளை கொம்பின் ஒளிமுகமே சரணம்!
வெற்றிதரும் விழிமுகமே சரணம்!
விநாயகா போற்றி… விக்னேஸ்வரா போற்றி…
