Monday, October 23, 2023
HomePurana Kathaigalமொட்டை விநாயகர் கோயில் வரலாறு!

மொட்டை விநாயகர் கோயில் வரலாறு!

மொட்டை விநாயகர் கோயில் வரலாறு!

மதுரையில் கீழமாசி வீதியில் உள்ள விநாயகர் மொட்டை விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள் புரிகிறார். ஒரு சமயம் பார்வதிதேவி தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு “கணபதி’ என பெயர் சூட்டி தனது லோகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்பாளை தரிசிக்க வந்தனர். அவர்களை அனுமதிக்க கணபதி மறுத்து விட்டார்.

அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே, அவர்களுடன் போரிட்டு விரட்டி விட்டார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவரும் கணபதியிடம் நேரில் வந்து பேசிப் பார்த்தார். சிவனையும் அனுமதிக்க கணபதி மறுக்கவே, கோபம் கொண்டது போல் நடித்த சிவன், கணபதியின் தலையை வீழ்த்தி விட்டார். இதையறிந்த பார்வதி, தன்னால் உருவாக்கப்பட்ட கணபதிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டினாள். சிவன் அவருக்கு யானையின் தலையைப் பொருத்தி முழு முதல் பொருளாக்கினார்.
தான் உட்பட யாராக இருந்தாலும் தன் மைந்தன் கணபதியை வணங்கிய பிறகே பிறரை வணங்க வேண்டும் என்றார்.

விநாயகரை கணங்களுக்கெல்லாம் அதிபதியாக்கினார். சிவன், கணபதியின் தலையை வீழ்த்திய நிகழ்வை உணர்த்தும் விதமாக விநாயகர் இங்கு தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருளுகிறார். தலை இல்லாமல் விநாயகரைக் கொண்ட ஒரே கோயில் இது என்பது இதன் சிறப்பாகும். வியாபாரிகள் தினமும் தங்களது தொழிலை தொடங்கும் முன்பு கடைச் சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர். இவ்வாறு செய்வதால் தமது தொழில் சிறப்பதாக அவர்கள் நம்புகின்றனர். எனவே இவர் வியாபார பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

பலன்கள்:

கல்வியில் சிறப்பிடம் பெற, வியாபாரம் விருத்தியடைய இவரிடம் வேண்டி பலனடையலாம். மதுரை கீழமாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோயில் தேருக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

விளக்கேற்றுவதற்கான பொதுவான விதிமுறைகள்!

பூஜைக்கு ஏற்ற ஒரு முக்கியமான விஷயம் விளக்கு. விளக்கு ஏற்றாமல் பூஜை செய்ய மாட்டார்கள். வீட்டிலோ அல்லது கோவில்களிலோ விளக்கேற்றுவது நற்பலனை தரக்கூடியதாகும். விளக்கில் குத்து விளக்கு, ஐயப்ப விளக்கு மற்றும் அகல் விளக்கு, மண் விளக்கு என பலவிதமான விளக்கு இருக்கின்றன. எந்த விளக்காக இருந்தாலும் அதனை ஏற்றி வைத்தால் தான் நன்மை கிடைக்கும். விளக்கை ஏற்றுவதற்கான பொது விதிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்து விளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

தீபம் ஏற்றும் போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

தீபம் இல்லத்தில் அமையும் சுபம். ஆகவே தினந்தோறும் விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =

Most Popular