ஷடாசீதி புண்ணிய காலம் என்றால் என்ன?
ஆனி மாதத்தில் சிவனை வழிபட கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். ஷடாங்கன் என்றால் சிவன் என்று அர்த்தம். ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்கள் சிவனுக்குரிய மாதங்களாகவே கருதப்படுகின்றன. இந்த மாதங்கள் பிறக்கும் நேரம் தான் ஷடாசீதி புண்ணிய காலம் ஆகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. ஆனி 1 ஆம் தேதி முதல் 24 மணி நேரம் சிவனுக்கு விசேஷமான ஷடாசீதி புன்ணிய காலமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி 1ம் தேதி ஆக வருடத்தில் நான்கு ஷடா சீதி புண்ணிய காலம் வரும். ஷடாசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவன், சக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனி சிறப்பினைத் தரும்.
விஷுவகன் என்றால் பிரம்மா. சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதங்கள் பிர்மமாவுக்குரிய மாதங்கள். இதில் சித்திரை மற்றும் ஐப்பசி மாத பிறப்பு விஷு புண்ணியகாலம். ஆடி மாதம் தட்சிணாயன புண்ணியகாலம், தை மாதம் உத்திராயன புண்ணியகாலம். பகவான் விஷ்ணுவுக்குாிய மாதங்கள் வைகாசி, ஆவணி, காா்த்திகை, மாசி மாதங்கள். இந்த மாதங்கள் பிறக்கும் நேரமே விஷ்ணு பதி புண்ணியகாலம்
ஷடாசீதி புண்ணிய காலம்
சிவ பெருமானுக்கு மிக பிரியமான மேஷம், கடகம், கன்னி, கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் இந்த நாளில் சிவன், சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு ஆற்றலையும் மன மகிழ்ச்சியையும் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. இன்றைய தினம் முழுவதும் முடிந்தவரை சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும்.
நினைத்தது நிறைவேறும்
இந்த நாளில் சிவன், சக்தியிடம் நீங்கள் வைத்த கோரிக்கை, அடுத்துவரும் மூன்று ஷடாசீதி புண்ணிய காலத்திற்குள் நிச்சயம் நிறைவேறும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால், பித்ருக்களின் ஆசியும், உதவிகளும் நிச்சயம் கிடைக்கும். திரு என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை வழிபட்டு வருவது சிறப்பினைத் தரும்.
சிவனின் அருள்
சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள். தேவர்களுக்கு எல்லாம் தேவர் மகா தேவர், மகேஸ்வரன். சிவன் எளிமையானவர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்…
சிவனின் அடி முதல் முடி வரை நமது வாழ்வியல் குறித்தும் பண்பு நலன்கள் குறித்து சூசகமாக பல விசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
சிவனின் தோற்றம்:
என்னதான் சிவபெருமான் எளிமையான்வராக இருந்தாலும், அவரது உடல் திறன் மிகவும் வலிமையானது. இதன் மூலம் எளிமையானவர்களின் வாழ்க்கைதான் வலிமையாக திடமான நிலைக்கு செல்லும் என்பதை உணரலாம்…
ஜடாமுடி, நெற்றிக்கண், திரிசூலம், சாம்பல் பூசிய தோற்றம், நாகம், நீலகண்டம், உடுக்கை, நாகம், கங்கை கமண்டலம் என அனைத்துமே மனித வாழ்க்கைக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது.
