Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalவிரைவில் கடன் அடைக்க ஏற்ற காலம் எது?

விரைவில் கடன் அடைக்க ஏற்ற காலம் எது?

விரைவில் கடன் அடைக்க ஏற்ற காலம் எது?

இருபத்தி ஏழு நட்சத்திரத்தில் குறிப்பாக, அனுஷம் அல்லது அஷ்வினி நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து அதே சமயம் சந்திரனும் உதயமாகும் லக்னத்தில் இருந்தால் அது கடன் அடைக்க ஏற்ற காலம் ஆகும். செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நவமி, சதூர்த்தி, சதூர்த்தசி திதிகள் கூடி வந்தால் அந்த நேரம் கடன் அடைக்க உகந்த நேரம் எனக் கருதப்படுகிறது. மேலும் இந்த நேரம் எதிரிகளிடம் இருந்து வெற்றியை பெற்றுத் தரும்.

விரைவில் கடன் அடைக்க லக்னமும் பார்க்கப் படுகிறது. அதில் கடன் அடைக்க தேர்ந்தெடுக்கும் லக்னம் மேஷம், கடகம் , துலாம் , மகரம் இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்து பிரதோஷமும் சேர்ந்து வந்தால் அந்த நேரம் கடன் அடைக்க மிக சிறந்த நேரமாகும். நாம் கடன் அடைக்கும் லக்னத்தில் ராகு இருந்து கிரஹண தினமாகவும் இருந்து வ்யாதீபாதத்துடன் இணந்து வந்தால் கடன் வாங்கவும் கூடாது. கடனை திரும்ப அடைக்கவும் கூடாது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிகை காலத்தின் சிறப்பு:

சிலர் கடன் கழுத்தை நெரிக்கிறது என்பார்கள். அப்படிப் பட்டவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும். சுப செயலான நகை வாங்குவது, தொழில் தொடங்குவது, நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம். திருமணத்தை நடத்தக் கூடாது. அது போல் கடன் வாங்குவது, பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கிழமைகளும் குளிகை நேரமும்:

ஞாயிறு 3 மணி முதல் 4.30 மணி வரை
திங்கள் 1.30 மணி முதல் 3 மணி வரை
செவ்வாய் 12 மணி முதல் 1.30 மணி வரை
புதன் 10.30 மணி முதல் 12 மணி வரை
வியாழன் 9 மணி முதல் 10.30 மணி வரை
வெள்ளி 7.30 மணி முதல் 9 மணி வரை
சனி 6 மணி முதல் 7.30 மணி வரை

கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி கடனை திரும்பச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும். மிகக் குறிப்பாக செவ்வாய்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் சனிக்கிழமை காலை 6 – மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் சிறு பகுதியை கொடுத்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை காணலாம்.

பைரவர் வழிபாடு:

ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். நமது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தியும், ஆற்றலும் பைரவ பகவானுக்கு உள்ளது. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடித்து வைத்து நன்கு நனைத்து தீபமேற்றி பைரவர் அஷ்டகம் வாசித்தால் போதுமானது. ஒன்பது வாரங்களில் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + twelve =

Most Popular