Wednesday, October 25, 2023
HomeHealthy Recipesகிராமத்தின் மருந்தகம் எனக் கூறப்படும் சிறப்புமிக்க வேப்பம் பூவில் இத்தனை பயன்கள் இருக்கிறதா?

கிராமத்தின் மருந்தகம் எனக் கூறப்படும் சிறப்புமிக்க வேப்பம் பூவில் இத்தனை பயன்கள் இருக்கிறதா?

கிராமத்தின் மருந்தகம் எனக் கூறப்படும் சிறப்புமிக்க வேப்பம் பூவில் இத்தனை பயன்கள் இருக்கிறதா?

நம் கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள மரம் தான் வேப்ப மரம். வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவையாகும். இதனாலேயே “கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது.

சித்திரை மாதத்தில் வேப்பம் பூ பூத்து வசந்த காலத்தை நமக்கு அறிவிக்கும். வேப்பம் பூ வெள்ளை நிறத்தில் காணப்படும். வேப்பம்பூக்கள் காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம் பூவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்:

1.பலருக்கும் ஏற்படும் வயிற்றுக் குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை குணமாகும். வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் இவற்றைக் குணமாக்கலாம். அல்லது வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து சாப்பிட்டால் வாந்தி ஏப்பம் நீங்கும்.

2.கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.

3.தோல் சம்மந்தப்பட்ட சொறி, சிரங்கு முதலானவற்றைக் குணமாக்கும். வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும்.

4.ஜீரணத்தை அதிகரித்து பசியைத் தூண்டும். பித்தத்தைப் போக்கும். இதற்கு வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.

5.உடல் எடையை குறைக்கும் உதவும் பூ இது. வேப்பம் பூவை ஒரு கைப்பிடி எடுத்து அதனை நீரில் ஊறவைத்து பின்னர் அந்நீரை தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

6.சிலருக்கு காதில் சீழ்வடிதல் குணமாகும். வேப்பம் பூவை நீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் ஆவியை காதில் படும்படி பிடித்து வந்தால் காதில் சீழ் வடிதல் குணமடையும்.

7.தொண்டைப் புண்ணைச் சரிசெய்ய உதவுகின்றது. வேப்பம் பூ சிறிதளவு உண்டு வந்தால் தொண்டைப்புண் நீங்கும்.

8.நம் குடலில் உள்ள கிருமிகள் மற்றும் குடற் புழுக்களை அழிக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பம் பூவைக் கஷாயமாக வைத்துக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

9.மலேரியா காய்ச்சலைக் குணமாக்கும். வேப்பம் பூ உடலிலுள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.

10.நீண்ட நாளாக உடலில் இருக்கும் வாயுத் தொல்லையைப் போக்கும். வேப்பம் பூக்களை மென்று தின்றால் இப்பிரச்சினை விரைவாகக் குணமடையும்.

11.குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். சிறிதளவு வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகாய் வைத்து அரைத்து சுண்டக்காய் அளவு குழந்தைகளுயுக்குக் கொடுத்து வந்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்துடன் வெளியேறிவிடும்.

12.பசியின்மை மற்றும் உடற்தளர்ச்சி நீங்கும். உலர்ந்த வேப்பம் புவை 50 மி.லி குடிநீர் விட்டு மூடிவைத்து பின் வடிகட்டிக் குடித்துவர பசியின்மை, உடற்தளர்ச்சி நீங்கும். அல்சரைக் குணமாக்கும் தன்மை வேப்பம் பூவிற்கு உண்டு.

13.நாக்கில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை நீக்கும். வேப்பம் பூவைத் தண்ணீரில் ஊறவைத்து அந்நீரைப் பருகுவதால் அல்லது அந்நீரால் வாயைக் கொப்பளித்தால் இப்பிரச்சினை நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =

Most Popular