Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalபித்ருக்களுக்கு திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும்?  

பித்ருக்களுக்கு திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும்?  

பித்ருக்களுக்கு திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும்?

யார் யாரெல்லாம் மூன்று தலைமுறைகளாக முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பித்ரு தோஷம் என்பது இருக்கவே இருக்காது.

முன்னோர்களின் ஆசிர்வாதம் ஒழுங்காக இருக்கும் குடும்பத்தில் பிரச்சினை என்பது இருக்காது அவர்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் அவர்களுக்கு உடனடியாக நடந்துவிடும்.

நமக்கு ஒரு பிரச்சனை என்று ஒன்று வந்தால் அந்தப் பிரச்சினையே நமக்கு வராமல் தடுப்பதற்கு இரண்டு பேர் மட்டும் தான் வருவார்கள் ஒன்று நம்முடைய பித்ருக்கள் இரண்டாவது நம்முடைய குல தெய்வம்.இந்த இரண்டு பேரின் ஆசீர்வாதமும் நமக்கு இருந்தால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

பித்ருக்கள் என்பவர்கள் கடவுளும் கிடையாது தீய சக்திகளும் கிடையாது இரண்டிற்கும் இடையில் இருப்பவர்கள்.அதாவது நமக்கு பிரச்சினை ஏற்பட்டால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அந்தப் பிரச்சினை வராமல் தடுப்பதற்கும் நம்முடைய பித்ருக்கள் தான் நேரடியாக கடவுளிடமிருந்து அந்த பிரச்சனைக்கான வழியை பெற்றுக் கொண்டு நமக்கு உதவுவார்கள்.

அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு ஒழுங்காக இருக்க வேண்டுமென்றால் நாம் வருடாவருடம் நம்முடைய முன்னோர் களுக்கு ஒழுங்காக திதி கொடுத்தே ஆக வேண்டும்.

நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நம்முடைய பரம்பரை விருத்தி ஆக வேண்டும் என்றால் நம்முடைய வளர்ச்சி உயரவேண்டும் என்றால் நமக்கு எந்த பிரச்சனைகளும் வராமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு இருக்க வேண்டும்.

முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு ஒழுங்காக இல்லாவிட்டால் நமது குடும்பத்தில் வளர்ச்சி என்பது இருக்காது உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் நாம் தர்ம சங்கடங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எடுத்த அனைத்து காரியங்களிலும் நமக்கு தோல்விதான் கிடைக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் மன வாழ்க்கையில் நிம்மதி சந்தோசம் இல்லாமல் இருக்கும்.எடுத்த அனைத்து காரியங்களிலும் காரியத்தடைகள் என்பது ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

நமது கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் நமது குடும்பத்தில் பிரச்சனைகளும் சண்டைகளும் காரியத் தடைகளும், நிம்மதி இல்லாமல் தான் நாம் இருப்போம். சம்பாதிக்கக்கூடிய பணத்தை அவ்வளவாக சேமிக்க முடியாமல் பிரச்சனையில் தவிப்பது.

நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்றால் எடுத்த அனைத்து காரியங்களிலும் நமக்கு காரியத் தடைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் தொழிலில் நன்றாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால் முன்னோர்களுக்கு ஒழுங்காக நாம் திதி கொடுத்தே ஆக வேண்டும்.

நமது ஜாதகத்தில் இரண்டே விஷயங்கள் தான் மிக மிக முக்கியம் என்று நம்முடைய குல தெய்வத்தின் ஆசீர்வாதம் இரண்டாவது பித்ருக்களின் ஆசீர்வாதம் இந்த இரண்டும் நமக்கு ஒழுங்காக இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது வெற்றி தான் நமக்கு பிரச்சினை என்பதே வராது நம்முடைய வாழ்க்கையில் நாம் மிகப் பெரிய உச்சத்தை சென்றடைவோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 5 =

Most Popular