அரிசி உளுந்து இல்லாத தோசையா? அது எப்படி முடியும்?
இட்லி, தோசை என்றாலே அரிசி மற்றும் உளுந்தை அரைத்தை தான் தோசையோ ஊற்றுவதோ, இட்லி அவிப்பதோ செய்வார்கள். அப்படி வீட்டில் அரிசி, உளுந்து அரைத்த் மாவு இல்லையென்றால் கடைகளில் விற்கப்படும் மாவை வாங்கி வந்து இட்லி அவிப்பது, தோசை ஊற்றுவது இருக்கும். அப்படி அரிசி, உளுந்து அரைத்த மாவு இல்லையென்றாலும் கூட வீட்டில் மொறுமொறுப்பாக தோசை ஊற்றலாம். அது எப்படி என்று தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
தேவையானவை:
ரவை – 1 கப்
கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வெண்டும். ஆனால், ரவையை நம்மால் எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ, அந்த அளவிற்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்க வேண்டும்.
அரைத்து எடுத்து வைத்திருக்கும் மாவில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, ஒரு கப் அளவிற்கு லேசான புளித்த தயிர், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். தண்ணீராக இல்லாமல், கொஞ்சம் திக்காக இருக்கும் அளவிற்கு மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு 15 நிமிடம் வரையில் ஊற வைத்துவிட வேண்டும். அப்படி செய்தால் தான் ரவை, மாவு பதத்திற்கு வரும்.
இந்த அரைத்த மாவு நன்கு ஊறிய பிறகு, அதில் தோசை ஊற்றும் அளவிற்கு தேவையான தண்ணீர் விட்டு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அப்போது தான் தோசை பிரவுன் நிறத்திற்கு வரும்.
கடைசியாக தேவையான தோசை மாவு தயார். அதன் பிறகு என்ன, தோசை ஊற்ற வேண்டியதுதானே. அடுப்பில் தோசை கல்லை வைத்து, அது மிதமான சூட்டிற்கு வரும் வரையில் காத்திருந்தி கரைத்து வைத்திருக்கும் மாவை கரண்டியில் எடுத்து தோசை கல்லில் ஊற்றி வட்டமாக மாவை தோசை கல்லில் மெல்லிசாக தீட்ட வேண்டும். அப்படி செய்தால், நாம் விரும்பும் மொறுமொறு தோசை ரெடி.
