Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalசிவனின் குலம், கோத்திரம் என்ன தெரியுமா?

சிவனின் குலம், கோத்திரம் என்ன தெரியுமா?

சிவனின் குலம், கோத்திரம் என்ன தெரியுமா?

இமயமலையில் ஆடிக் கொண்டிருந்த போது தான் முதல் முதலில் சிவனை அனைவரும் அறிந்திருந்தனர். அவர் யாரிடமும் பழகுவதற்கு முயற்சிக்கவும் இல்லை, அவர் யாரும் இருப்பதாக அறிந்திருக்கவும் இல்லை. ஆனால், சிவன் இருப்பதை பற்றி அனைவரும் அறிந்திருந்தனர். சிவனைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்வதி தேவி தீவிரமாக தவமிருந்தாள். அவளது தவத்தில் மெச்சிய சிவபெருமான், அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளும் வந்தது. தேவர்களும், தேவலோக தேவதைகளும், அசுரர்களும், பூதங்களும், மிருகங்களும், புழு பூச்சிகளும் என்று அனைத்து ஜீவராசிகளும் சிவன் பார்வதி திருமணத்திற்கு வந்திருந்தனர். பார்வதி தேவி ராஜவம்சத்து இளவரசி என்பதால், தாலி கட்டுவதற்கு முன் முக்கியமான சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.

மணப்பெண் யார், மாப்பிள்ளை யார், அவர்களது குடும்பத்தார் யார், பாட்டனார் யார் என்று பூர்வீகத்தை சபையிலேயே அறிவிக்க வேண்டும். அரசனாக இருந்தாலும் சரி, அரசியாக இருந்தாலும் சரி பூர்வீகம் முக்கியம். அப்படி இருக்கும் போது பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணமகனான சிவனின் பூர்வீகம் அறிவிக்கப்பட இருந்த நிலையில் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி திரும்பினர். சிவன் சார்பாக யாரேனும், அவரது குல பெருமையை பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எழுந்து அவரது குல பெருமை பேசவில்லை.

ஏனென்றால், சிவனுக்கு பெற்றோர்களோ, உறவினர்களோ, குடும்பம் என்று எதுவும் இல்லை. தன்னுடன் இருக்கும் பூத கணங்களை மட்டுமே அவர் திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தார். அந்த பூத கணங்களும் பார்ப்பதற்கோ பயங்கரமாக இருந்தன. இதற்கிடையில் பார்வதி தேவியின் தந்தையான பர்வதராஜ், சிவனிடம் சென்று உங்களது முன்னோர்கள் பற்றி விவரிக்குமாறு வேண்டினார்.

அதற்கு சிவன் ஒன்றும் பேசவில்லை. தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்டது. ஆனாலும், சிவன் மௌனமாகவே இருந்துள்ளது. முன்னோர் யார் என்று தெரியாமல் யாரும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்க மாட்டார்களே. நல்ல நேரம் வேறு முடியப் போகிறது.

பார்வதி தேவியின் தந்தை பர்வதராஜ் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க, சிவன் மௌனமாகவே இருக்க, அரசர்களும், பண்டிதர்களும் சிவனை ஏளனமாக பார்த்து சிரிக்க தொடங்கினர். அப்போது சபையிலிருந்த நாரதர், தனது வீணையை எடுத்து வாசிக்க தொடங்கினார். தொடர்ந்து வாசித்து கொண்டே இருந்தார். இது பர்வதராஜிற்கு எரிச்சலை உண்டாக்கியது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த பர்வதராஜ், நாரதரிடம் கேட்டார். ஏன் இப்படி ஒரே சப்தத்தை எழுப்பி கொண்டிருக்கிறீர்கள்? என்றார். இதற்கு நாரதர், அவரைப் பெற்றவர்கள் யாரும் இல்லை என்றார். மறுபடியும், மறுபடியும் பர்வதராஜன் கேட்டுக் கொண்டே இருந்தார்.

அதற்கு நாரதரோ, சிவனுக்கு பெற்றோர் என்று யாரும் இல்லை. அவருக்கு என்று எந்த பூர்வீகமும் இல்லை. அவரிடம் அவர் மட்டுமே தான் இருக்கிறார் என்றார். இதற்கு பர்வதராஜ், யாராக இருந்தாலும் மனிதராக பிறந்துவிட்டாலே, அவருக்கு தாய் தந்தை இருக்க வேண்டும் அல்லவா? அது எப்படி தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நாரதர், அவர் சுயம்புவாக தானாக தோன்றியவர். அவருக்கு தாயும், தந்தையும் இல்லை. எந்த பூர்வீகமும், முன்னோர்களும் இல்லை. அவர் எந்த கோத்திரத்தையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எல்லாவற்றையும் கடந்தவர். அவர் ஒரு யோகி. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னதாக முதன் முதலில் உருவானது சப்தம் மட்டுமே. ஆதலால், அந்த சப்தம் மட்டுமே அவருக்கு ஒரு முன்னோடி.

சப்தம் உருவான பிறகே தான் படைப்பு நிகழ்ந்தது. அதே போன்று இவரும் ஒலியின் மூலமாகவே தோன்றினார். அதனை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தான் நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பியவாறு இருந்தேன் என்றார் நாரதர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =

Most Popular