எந்த நட்சத்திரத்தன்று என்ன தெய்வத்தை வணங்க வேண்டும்?
1. அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை, உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும்.
2. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும்.
3. அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும். கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம். இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம்.
4. பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும். அறுவை சிகிச்சை செய்வதற்கும், டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதும் செய்யலாம்.
5. அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள், தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும்.
6. திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும்.
7. அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம்.
8. மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம்.
9. மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும். தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.
10. மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும்.
எந்த தெய்வங்களை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
1 ) செல்வம் சேர வேண்டுமெனில்: ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம்.
2) ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டுமா?: ருத்திரனை வழிபாடு செய்யலாம்.
3) மனவலிமை, உடல் வலிமை பெற: ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம்.
4) கல்வியில் சிறந்து விளங்க: ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.
5) திருமணம் நடைபெற: ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.
6) மாங்கல்யம் நிலைக்க: மங்கள கவுரி
7) புத்திர பாக்கியத்தை பெற: சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம்.
8) விவசாயம் தழைக்க: ஸ்ரீதான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.
9) சாப்பாட்டு கஷ்டம் நீங்க: ஸ்ரீஅன்னபூரணியை வழிபடலாம்.
10) பகைவர் தொல்லை நீங்க: திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.
11) திருஷ்டி விலக: முத்துமாரியை வழிபடலாம்.
12) புதிய தொழில் துவங்க வேண்டுமெனில்: ஸ்ரீகஜலட்சுமி வழிபாடு செய்யலாம்.
14) நோய் தீர: ஸ்ரீதன்வந்தரி, தட்சிணா மூர்த்தி.
15) முடி நரைத்தல், உதிர்தல்: மகாலட்சுமி, வள்ளி.
16) கண் பார்வைக் கோளாறுகள்: சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்.
17) காது, மூக்கு, தொண்டை மற்றும் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, பித்தம்: முருகன்.
18) ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், ஞாபகசக்தி குறைவு: மகாவிஷ்ணு.
19) மாரடைப்பு, இருதய கோளாறுகள்: சக்தி, கருமாரி, துர்க்கை.
20) அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா: தட்சிணாமூர்த்தி, முருகன்.
23) பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்: ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளி.
24) மூட்டுவலி, கால் வியாதிகள்: சக்கரத்தாழ்வார்.
25) வாதங்கள்: சனிபகவான், சிவபெருமான்.
27) வாயுக் கோளாறுகள்: ஆஞ்சநேயர்.
28) எலும்பு வியாதிகள்: சிவபெருமான், முருகன்.
29) ரத்தசோகை, ரத்த அழுத்தம்: முருகன், செவ்வாய் பகவான்.
30) குஷ்டம், சொறி சிரங்கு: சங்கர நாராயணன்.
31) அம்மை நோய்கள்: மாரியம்மன்.
32) தலைவலி, காய்ச்சல் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற: விநாயகர் வழிபாடு நல்லது
33) புற்று நோய்: சிவபெருமான்.
