திருமலை அவருடைய இளமை காலத்தில் மிகவும் அழகாவும், அதே நேரத்தில் நீண்ட அழகான தலைமுடியை கொண்ட கடவுளாகவும் இருந்திருக்கின்றார்.
பூமிக்கு வந்த கொஞ்ச நாளில் அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட அவரின் பக்தை காந்தர்வ இளவரசி நீல தேவி தன்னுடைய தலைமுடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட திருமால், தன்னுடைய வரம் வேண்டி, திருப்பதி ஸ்தலத்தில் வந்து மொட்டையிட்டு வேண்டிக் கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன்” என்று சொல்லியிருக்காரு. லட்டுக்கு மட்டும் இல்லாம மொட்டைக்கும் ஃபேமஸான இடம் தான் திருப்பதி.
தெளிவாக தெரியவேண்டுமென்றால், திருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று சொல்லி மொட்டை அடிக்கும் வழக்கமும் உண்டு.
பொதுவாக மனித உடலில் இயல்பாக வளரக்கூடியவை முடியும், நகமுமே. மனிதன் இறந்த பின்னும் உடலில் வளரக்கூடியவை, இவை இரண்டும்தான். மனிதனின் உயிர் உறையும் இடமாக முடியைக் கருதும் பழக்கம், பழங்குடிச் சமூகங்களின் நம்பிக்கைகளில் இருந்து தொடர்கிறது. எனவேதான் முடியை ‘உயிர்ப்பொருள்’ என்று தொன்மவியலாளர்கள் அழைக்கிறார்கள். முடியைக் காணிக்கை ஆக்குவதன் மூலம் நம் உயிரையே இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம் என்பதே அதன் தாத்பர்யம்.
பணம் ,பொருள் ஆகியவற்றைக் காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது விசேஷமானதாகக் கருதப்படவும் இதுவே காரணம். திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை அளிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? முதன்முதலில் பெருமாளுக்கு முடி காணிக்கை அளித்தது யார் என்று தேடினால் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று கிடைத்தது.
சீனிவாசன் புற்றில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது, பசு ஒன்று அவருக்குத் தினமும் பால் சுரந்து தாகம் தீர்த்தது. அந்த மாட்டின் சொந்தக்காரன், பசு வீணாகப் புற்றொன்றில் பால் சுரப்பது கண்டு கோபமுற்று தன் கையில் இருந்த ஆயுதத்தை எறிந்தான். அது புற்றின் உள்ளே இருந்த பகவான் சீனிவாசன் மீது பட்டது. இதனால் அவர் தலையில் சிறு காயம் உண்டாகி தலையில் இருந்த கொஞ்சம் கேசமும் சிதைந்தது.
ஒரு முறை சீனிவாசனின் மகிமைகளைக் கேள்விப்பட்டு, அவரை தரிசனம் செய்ய ‘நீளா ‘என்கிற நீளாத்ரி மலையின் இளவரசி வந்தாள். அப்போது பெருமாள் சயனித்திருந்தார். காற்றில் அவரின் கேசம் கலைய, தலையின் சிறுபகுதி கேசமின்றி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ஒளிபொருந்திய அழகிய பெருமாளின் முகத்துக்கு இது ஒரு குறையாக இருப்பதாக உணர்ந்தாள். உடனடியாகத் தன் தலையில் இருந்து கேசத்தை வேரோடு வருமாறு வலிமையாகப் பிடுங்கினாள். அந்த முடிகளை, முடிகளற்ற பெருமாளின் தலையில் வைத்து, ‘தன் பக்தி உண்மையானால், இந்தக் கேசம் ஒட்டிக்கொள்ளட்டும்’ என்று வேண்டிக்கொண்டாள். அடுத்த கணம் அந்த கேசம் அவர் தலையில் ஒட்டிக்கொண்டது.
தினமும் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வணங்குகிறார்கள். பெருமாளும் அதை மானசீகமாக ஏற்று பக்தர்களுக்கு அருள்கிறார். ஒவ்வோர் ஆண்டும் காணிக்கை மூலம் வழங்கப்படும் முடி ஏலம் விடப்பட்டு கோடிக்கணக்கான பணம் திரட்டப்படுகிறது. அந்தப் பணமும் தேவஸ்தானத்தின் மூலம் திருப்பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தத் திருப்பணிகளில் எல்லாம் முடி தானம் வழங்கியவர்களின் பங்கும் நிறைந்து பல்வேறு புண்ணிய பலன்களைப் பெற்றுத்தரும்.
