Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 21.03.2021

இன்றைய ராசிப்பலன் – 21.03.2021

மேஷம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்குவதில் இருந்த சிக்கல்கள் விலகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகப் பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கன்னி

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி அடைய சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. போட்ட திட்டங்கள் நிறைவேற சில தடங்கல்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

தனுசு

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.

மகரம்

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

மீனம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். குடும்பத்தில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

Most Popular