மந்திர கட்டை நீக்க பரிகாரம்

334

எங்கள் குடும்ப விரோதிகள் நாங்க கும்பிடற குலதெய்வத்தை மந்திர கட்டு மூலம் கட்டி போட்டாங்க அந்த கட்டை எப்படி அவிழ்ப்பது?
பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது.
இன்று அதுபோல் லாம் மந்திர கட்டுக்களை போடும் மாந்த்ரீகர்கள் அவ்ளவாக இல்லை. ஒருவேளை அப்படி மந்திர கட்டு போட்டிருந்தால் அந்த மந்திர கட்டை நீக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
குலதெய்வ பூஜைக்காக எவ்ளவோ பேர் என்னிடம் கருங்காலி குச்சியை வாங்கி இருக்கிறார்கள். அவ்வாறு வாங்கி பூஜை செய்யும் ஒவ்வொருவரின் வாழ்விலும் சில அதிசயங்கள், அமானுஷ்யங்கள் நடந்து இருக்கு. கருங்காலியின் மகத்துவமே அது தான். பொதுவாக கருங்காலி குச்சியை வைத்து உங்கள் குலதெய்வத்தின் பெயரை 3 தடவை சொல்லி அழைத்தாலே அந்த மந்திர கட்டு செயல் இழந்து போகும். ஒருவேளை அப்படி செய்தும் அந்த மந்திர கட்டு செயல் இழந்து போகவில்லை. அவ்ளவு வலுவாக அந்த மந்திர கட்டு இருக்கிறது என்றால் கருடாழ்வாரின் அருளால் எத்தகைய வலிமையான மந்திர கட்டையும் ஒரு நொடியில் அறுக்கலாம். ஆம்.
கருடாழ்வார் அணைத்து விதமான மந்திர கட்டுக்களையும் அறுக்க வல்லவர். அன்று ராமர், லக்ஷ்மணருக்கு இந்திரஜித் போட்ட மந்திர கட்டையே அவிழ்த்தவர் கருடாழ்வார். அதனால் கருட கவசம், கருட தண்டகம் இரண்டையும் வீட்டில் தொடர்ந்து ஒலிக்க விடுங்கள். அப்புறம் உங்கள் குலதெய்வ கோவிலில் கருட சூக்த பாராயணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். வேத விற்பன்னர்களை கொண்டு கருட சூக்த பாராயணம் செய்தால் எப்பேர்ப்பட்ட மந்திர கட்டுக்களும் செயல் இழந்து போகும்.
பெருமாள் கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும், சிவன் கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் கருடாழ்வார் வந்து கோபுரத்தை வட்டமடித்தால் தான் அந்த கும்பாபிஷேகமே நிறைவு பெரும்.
கருடாழ்வாருக்கு மிஞ்சிய சக்தி னு ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி ப்ரியாய, அமிர்த கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமராய, பக்ஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.