Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 03.05.2020

இன்றைய ராசிப்பலன் – 03.05.2020

மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்
இன்று தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வேலையாட்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். நல்ல நட்புகள் ஏற்படும்.

சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். தொழிலில் உங்களது முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கன்னி
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான சிக்கல்கள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்
இன்று சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். இருக்கும் இடத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு
இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் சிக்கலை எதிர் கொள்ள முடியும். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

Most Popular